fbpx
UAE Tamil Web

துபாய் வாழ் மக்கள் கவனத்திற்கு: இந்த சாலையை இன்று பயன்படுத்த வேண்டாம்..!

AL SHINTAGA

துபாயில் உள்ள அல் ஷிண்டாகா சுரங்கப்பாதை இன்று (ஜனவரி 9) காலை 12.30 (AM) முதல் காலை 8 மணி வரையிலும் மூடப்படும் என துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ட்விட்டர் வாயிலாகத் தெரிவித்துள்ளது. தேராவை, புர் துபாயுடன் இணைக்கும் இந்த சுரங்கப்பாதை நேற்று காலை 12.30 (AM) முதல் காலை 10.30 மணி வரையிலும் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆகவே வாகனவோட்டிகள், அல் மக்தூம் மேம்பாலம் (Al Maktoum Bridge) மற்றும் கார்ஹூட் மேம்பாலம் (Garhoud bridge) ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு போக்குவரத்து ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதன் காரணமாக குறிப்பிட்ட சில வழித்தட பேருந்துகளின் இயக்கம் தாமதமாகலாம் என போக்குவரத்து ஆணையம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

X13, X02, 8, 95, C01, C03, C07, C09, C18, E306 மற்றும் X23 ஆகிய வழித்தட பேருந்துகள் இயக்கம் இதனால் தாமதமடையலாம்.