29.1 C
Dubai
October 30, 2020
UAE Tamil Web

சன்னி லியோனை சந்திக்க வாய்ப்பு : துபாய் உலக வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கும் விற்பனைத் திருவிழா..!

E-meet Sunny Leone

துபாய் உலக வர்த்தக மையத்தில் (DWTC) செப்டம்பர் 30 ஆம் தேதிமுதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரையில் CBBC (Concept Big Brands Carnival) அமைப்பின் மிகப்பெரிய விற்பனைத் திருவிழா நடைபெற இருக்கிறது.

இதில் பங்குபெரும் அதிர்ஷ்டசாலி நபர்களுக்கு இணையம் வழியாக சன்னி லியோனை சந்திக்கவும் வாழ்த்துக்களை தெரிவிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது. பாலிவுட்டின் முக்கிய நடிகைகளில் ஒருவரான சன்னி லியோன் மேற்கண்ட நாட்களில் நடைபெறும் விற்பனைத் திருவிழாவில் காணொளிக் காட்சி மூலமாகப் பங்கேற்கிறார்.

சன்னி லியோனை சந்திக்க விரும்புபவர்கள் தங்களுக்குப் பிடித்தமான ஸ்டார் ஸ்ட்ரக் பொருட்களை (Star Struck products) 249 திர்ஹம்ஸ் அல்லது அதற்கு மேற்பட்ட விலையில் வாங்கவேண்டும். அதன்மூலம் சன்னி லியோனை சந்திப்பதற்காக தங்களது பெயரை பதிவு செய்துகொள்ளலாம்.

துபாய் உலக வர்த்தக மையத்தின் 5 மற்றும் 6 வது ஹால்களில் இந்த விற்பனைத் திருவிழா நடைபெற இருக்கிறது. இதற்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் உலக வர்த்தக மையத்துடன் இணைந்து CBBC இந்த விற்பனைத் திருவிழாவை நடத்த இருக்கிறது. துபாய் சுகாதார ஆணையம் விதித்திருக்கும் கொரோனா முன்னெச்சரிக்கை வழிமுறைகளின் அடிப்படையில் இந்த விற்பனைத் திருவிழா நடைபெற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாகோஸ்ட் (Lacoste), ஐக்னர் (Aigner), போஸ் (Boss), அடிடாஸ் (Adidas), கெஸ் (Guess), ஸ்டீவ் மேடன் (Steve Madden), ரேபான் (Rayban), திவாகே (Divage) மற்றும் டீசல் (Diesel) உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் இந்த விற்பனைத் திருவிழாவில் பங்கேற்க இருக்கின்றன.

“நகரத்தின் மையப்பகுதியில் CBBC அமைந்திருக்கிறது. மக்கள் தங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் தள்ளுபடி விலையில் ஒரே இடத்தில் வாங்க இதுவே சிறந்த இடம்” என CBBC ன் நிறுவனரும் தலைவருமான விஜய் சமைனி தெரிவித்தார்.



error: Alert: Content is protected !!