fbpx
UAE Tamil Web

துபாயில் தீபாவளி அதிரடி விற்பனை : 200 முன்னணி பிராண்டுகளுக்கு 80 சதவிகித தள்ளுபடி அறிவிப்பு..!

CBBC (2)

துபாயில் உள்ள உலக வர்த்தக மையத்தில், CBBC (Concept Big Brands Carnival) பிரம்மாண்ட தள்ளுபடி விற்பனையை அறிவித்திருக்கிறது. உலகின் முன்னணி 200 பிராண்டுகளுக்கு 80 சதவிகிதம் வரையிலும் இங்கே தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது.

அக்டோபர் 29 – நவம்பர் 2 ஆம் தேதிவரையில் நடைபெறும் இந்த தள்ளுபடித் திருவிழா WTC யின் 5 மற்றும் 6 வது ஹால்களில் நிகழ இருக்கிறது. இந்நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் இவ்விற்பனை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குச்சி (Gucci), வெர்சாஸ் (Versace), போஸ் (Boss), சிகே (CK), கெஸ் (Guess), ஸ்ப்லாஷ் (Splash), ரால்ஃப் லாரென் (Ralph Lauren), பாப்லோஸ்கி (Pablosky), ஸ்டீவ் மேடன் (Steve Madden), டெசிகுவல் (Desigual), எக்கோ (Ecco), ஐக்னர் (Aigner), அடிடாஸ் (Adidas), லாகோஸ்ட் (Lacoste), ஆக்சிலி (Oxxily), ரேபான் (Rayban) மற்றும் போலீஸ் (Police) உள்ளிட்ட பல பிராண்டுகள் இந்த விற்பனைத் திருவிழாவில் பங்கேற்கின்றன.

உலகின் முன்னணி பிராண்டுகளை ஒரே இடத்தில் வாங்க CBBC சிறந்த இடமாகும். இதனாலேயே இது துபாயின் ஷாப்பிங் மையமாகத் திகழ்கிறது. மேலும், இங்கு நுழைவுக்கட்டணம் இல்லை என்பதும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்பதும் இதன் கூடுதல் சிறப்பம்சமாகும்.