39.2 C
Dubai
September 22, 2020
UAE Tamil Web

துபாய்: அல் கூஸ் தொழில்துறை பகுதியில் உள்ள கிடங்கில் தீ விபத்து..

Fire

துபாயில் உள்ள கிடங்கு ஒன்றில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட தகவலின் படி துபாயின் அல் கூஸ்(Al Quoz ) தொழில்துறை பகுதியில் அமைந்துள்ள பிளாஸ்டிக் மற்றும் காகிதப் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

விபத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றபோது, அந்த பகுதியில் இருந்து அடர்த்தியான கரும்புகை எழுந்தது.

Twitter Link | Archive Link

இது குறித்து தகவல் தெரிவித்துள்ள அதிகாரிகள், துபாய் சிவில் பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று பிற்பகல் 1:17 மணியளவில் வந்த அவசர அழைப்பில், அல் கூஸ் தொழில்துறை பகுதி 3-ல்(Al Quoz Industrial Area 3) அமைந்துள்ள கிடங்கு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது என்று கூறினர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அல் கூஸ் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள், தீயை அணைக்கும் பணியிலும், அருகில் உள்ள கிடங்குகளுக்கு தீ பரவாமல் தடுக்கும் பணியிலும் ஈடுபட்டனர். மதியம் 2:15 மணியளவில் கிடங்கில் பற்றிய தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், இதில் உயிரிழப்புகளோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!