UAE Tamil Web

விமான குடும்பத்தில் ஒரு புதிய உறுப்பினரை சேர்த்த DXB.! 166 பயணிகளுடன் இஸ்ரேலில் இருந்து துபாய் வந்த முதல் வணிக விமானம்

israir

அமீரகம் – இஸ்ரேல் இடையே சுமுக உறவு ஏற்பட்டுள்ள நிலையில் இஸ்ரேலில் இருந்து முதல் கமர்ஷியல் விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

- Advertisment -

இதன் மூலம் இஸ்ரேலிய கேரியர் விமான நிறுவனமான இஸ்ரேர் ஏர்லைன்ஸ் (Israir Airlines), துபாய் சர்வதேச விமான நிலையத்தில் (DXB), தரையிறங்கிய முதல் இஸ்ரேலிய கமர்ஷியல் விமானமாக வரலாற்றை உருவாக்கியுள்ளது.

இஸ்ரேலிய நேரப்படி நேற்று காலை 10 மணிக்கு 166 பயணிகளுடன் டெல் அவிவ்-யாஃபோவில்(Tel Aviv-Yafo) இருந்து புறப்பட்ட விமானம் 6 எச் 663(Flight 6H 663) விமானமானது, துபாய் நேரப்படி நேற்று மாலை 5.10 மணிக்கு துபாயில் தரையிறங்கியது.

இஸ்ரேர் தனது ஏர்பஸ் ஏ 320 விமானங்களைப் பயன்படுத்தி மேற்கண்ட இரண்டு இடங்களுக்கு இடையே 14 வாராந்திர விமானங்களை இயக்க உள்ளது. பிராந்தியத்தின் 2 முக்கிய வர்த்தக மற்றும் சுற்றுலா இடங்களை இணைப்பதன் மூலம் DXB-ன் சர்வதேச இணைப்பு அதிகரிக்கும். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் தளவாட வாய்ப்புகள் விரிவுபடுத்தப்படும்.

இந்த புதிய சேவையின் அறிமுகம் விடுமுறை காலத்தின் தொடக்கத்துடன் ஒத்துப்போகிறது, இதன் போது DXB விமான நிலையம் வழியே பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.