UAE Tamil Web

துபாய்: மெட்ரோவின் 4 புதிய நிலையங்கள் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தன..!

Dubai-Metro_

துபாய் மெட்ரோவின் 4 புதிய நிலையங்கள் இன்று முதல் பயன்பட்டிற்குவந்த நிலையில் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பயணங்களை மேற்கொள்ளுமாறு துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மக்களை அறிவுறுத்தியுள்ளது.

ஜெபல் அலி மெட்ரோ நிலையத்தில் இருந்து ரூட் 2020 க்குச் செல்லும் வழியில் கட்டப்பட்டுள்ள இந்தப் புதிய நிலையங்கள் ஜனவரி 1 ஆம் தேதியான இன்று காலை 10 மணிமுதல் பயன்பாட்டிற்கு வந்தன.

RTA வின் ரூட் 2020 விரிவாக்கத் திட்டத்தின் ஒருபகுதியாக ஜெபல் அலி (Jebel Ali), தி கார்டென்ஸ் (The Gardens), டிஸ்கவரி கார்டென்ஸ் (Discovery Gardens) மற்றும் அல் ஃபர்ஜன் (Al Furjan) ஆகிய நான்கு புதிய நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதன்மூலமாக குடியிருப்பாளர்கள், குடிமக்கள் மற்றும் பார்வையாளர்கள் சிறந்த பயண அனுபவத்தைப் பெறமுடியும் என RTA தெரிவித்துள்ளது.

Dubai-Metro_
0 Shares
Share via
Copy link