UAE Tamil Web

துபாய்: மகனை பார்க்க அமீரகம் வந்த முன்னாள் இந்திய வெளிநாட்டவர் மரணம்.. பெரும் சோகத்தில் குடும்பத்தினர்

expat

அமீரகத்தில் இருக்கும் தனது மகனை பார்க்க வந்த முன்னாள் இந்திய வெளிநாட்டவர் துபாயில் உடல்நல குறைவால் காலமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisment -

இறந்த 82 வயதான யுபிசி அகமது ஹாஜி, அமீரகத்தில் அவர் நிறுவிய கிட்மத் உல் இஸ்லாம்(Khidmat Ul Islam) என்ற சமூக நலக் குழு மூலம், சமூக மற்றும் மத சேவைகளுக்காக நன்கு அறியப்பட்டவர் என ஸ்மார்ட் டிராவல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், அவரது மகனுமான அஃபி அகமது தெரிவித்துள்ளார்.

தன் தந்தை முதன்முதலில் 1978-ம் ஆண்டு அமீரகத்திற்கு வந்து இங்கு ஒரு வர்த்தக நிறுவனத்தை நடத்தி வந்தார். அப்போதுதான் அவர் சமூக சேவையில் தீவிரமாக இறங்கினார் என்று கல்ஃப் நியூசிற்கு அளித்த பேட்டியில் அஃபி அகமது தெரிவித்துள்ளார்.

1993-ல் அகமது ஹாஜி கேரளா திரும்பி விட்ட போதிலும், அவர் இங்குள்ள தனது மகன் அஃபி மற்றும் குடும்பத்தினரை சந்திக்க அடிக்கடி அமீரகம் வருவார். கொரோனா காரணமாக பல மாதங்களாக விமான சேவைகள் முடங்கியிருந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் தான் தனது பெற்றோரை விசிட் விசாவில் அமீரகம் அழைத்து வந்துள்ளார் அஃபி.

கடந்த அக்டோபர் 30-ம் தேதி சமூக நலக் குழு தொடர்புடைய சில உறுப்பினர்கள் அவரை சந்தித்து கவுரவித்ததை தொடர்ந்து என் தந்தை மகிழ்ச்சியாக இருந்தார்.

honour

இந்நிலையில் நவம்பர் 29 அன்று சுவாசக் கோளாறால் பாதியாக்கப்பட்ட அவர், துபாயில் உள்ள அல் குவைத் மருத்துவமனையில்(அல் பராஹா மருத்துவமனை) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை அகமது ஹாஜி காலமானார் என்று அஃபி தெரிவித்தார்.

தொடர்ந்து அகமது ஹாஜி ஞாயிற்றுக்கிழமை மாலை துபாயில் முஹைஸ்னாவில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.இறந்த யுபிசி அகமது ஹாஜிக்கு மனைவி, 5 குழந்தைகள், 12 பேரக்குழந்தைகள் உள்ளனர். மகனை பார்க்க வந்த இடத்தில் நிகழ்ந்த அவரது திடீர் மறைவு அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.