UAE Tamil Web

துபாய் துணை ஆட்சியாளர் மறைவு: அமீரகம் முழுவதும் உள்ள மசூதிகளில் இன்று இரவு ஜனாஸா தொழுகை (இறுதித் தொழுகை) நடத்த அரசு உத்தரவு..!

HAMDAN-BIN-RASHID

துபாயின் துணை ஆட்சியாளரும் அமீரக நிதி அமைச்சருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் இன்று காலமானதாக துபாய் ஆட்சியாளர் அறிவித்தார்.

- Advertisment -

இதனை முன்னிட்டு, அமீரகம் முழுவதிலும் உள்ள மசூதிகளில் இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஜனாஸா தொழுகை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தொழுகை மகரிப் தொழுகைக்கு பின்னர் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மறைந்த ஷேக் ஹம்தானின் இறுதி தொழுகையில் கொரோனா காரணமாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷேக் ஹம்தான் மறைவினை முன்னிட்டு நாளை முதல் 3 நாட்களுக்கு துபாய் முழுவதிலும் உள்ள அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ஷேக் ஹம்தானின் மறைவிற்கு துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு அமீரக கொடியானது அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அனைத்துத் துறைகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.