துபாயின் துணை ஆட்சியாளரும் அமீரகத்தின் நிதியமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் இன்று காலமானார். இதனையடுத்து அவரது உடல் துபாயில் உள்ள உம் ஹுரைர் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ஸபீல் மசூதியில் ஷேக் ஹம்தானின் மறைவினையோட்டி ஜனாஸா தொழுகை நடைபெற்றது. இதில், துபாய் ஆட்சியாளர் பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் துபாயின் துணை ஆட்சியாளரான ஷேக் மக்தூம் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஆகியோர் மட்டுமல்லாமல் மக்தூம் குடும்பத்தினைச் சேர்ந்த பல ஷேக்குகளும் இதில் கலந்துகொண்டனர்.
Pictures: @HHShkMohd, @HamdanMohammed and @MaktoumMohammed perform funeral prayers for the late Sheikh Hamdan bin Rashid Al Maktoum, joined by several Sheikhs of the Al Maktoum family at Zabeel Mosque. pic.twitter.com/zSx87r37hi
— Dubai Media Office (@DXBMediaOffice) March 24, 2021
ஷேக் ஹம்தானின் மருமகன்களான ஷேக் ஹம்தான் பின் முகமது மற்றும் ஷேக் மக்தூம் பின் முகமது ஆகியோரும் ஷேக் ஹம்தானின் உடலை கல்லறைக்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டனர்.
ஷேக் ஹம்தான் மறைவை முன்னிட்டு, அமீரகம் முழுவதிலும் உள்ள மசூதிகளில் இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஜனாஸா தொழுகை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தொழுகை மகரிப் தொழுகைக்கு பின்னர் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.