UAE Tamil Web

துபாய்: “சத்தம் போட்டால் கழுத்தை அறுத்துவிடுவோம்” கத்தி முனையில் மிரட்டப்பட்ட இந்தியர் ; 291,000 திர்ஹம்ஸ் பணத்தைக் கொள்ளையடித்த கும்பல் காவல்துறையிடம் சிக்கியது..!

kitchen-knife-

துபாய் : நைஃப் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் வழக்கம்போல பணியில் மூழ்கியிருந்தார் இந்தியாவைச் சேர்ந்த தொழிலபதிபர். அப்போது பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு நபர்கள் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்திருக்கின்றனர். யார் நீங்கள்? என்ன வேண்டும்? என இந்தியர் கேட்டுக்கொண்டிருக்கும்போதே மேலும் 5 பேர் அந்த அறையினுள் நுழைந்திருக்கிறார்கள்.

பாகிஸ்தானைச் சேர்ந்த இந்த 7 பேர் கொண்ட கும்பல், தொழிலதிபரை மோசமாக தாக்கி, அவரது வாயில் டேப் வைத்து ஒட்டியிருக்கிறார்கள். மேலும் கத்தியைக் காட்டி, சப்தம் எழுப்பினால் கழுத்தை அறுத்துவிடுவோம் எனவும் மிரட்டியிருக்கிறார்கள். ஆகவே அச்சத்தில் இந்தியர் உறைந்திருக்க, அந்தக் கும்பல் அலுவலகத்தில் இருந்த 291,000 திர்ஹம்ஸ் பணத்தை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றது.

இதுகுறித்து உடனடியாக காவல்துறையிடம் இந்தியர் புகாரளித்திருக்கிறார். ஒருவார தேடுதல் வேட்டைக்குப் பிறகு திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ஒருவரை காவல்துறை கைது செய்தது. அவர் மூலமாக மற்ற நபர்களையும் காவல்துறை கைது செய்திருக்கிறது. விசாரணையில் தங்களது குற்றங்களை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இந்த வழக்கின் தீர்ப்பு ஜூன் 22 ஆம் தேதி வெளியிடப்படும் என துபாய் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

kitchen-knife-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap