UAE Tamil Web

வாழ வழியின்றி துபாய் பூங்காவில் தஞ்சமடைந்த இலங்கையர்கள்.! பல வாரங்களுக்கு பிறகு கிடைக்க போகும் உதவிக்கரம்..

dubai

பல வாரங்கள் காத்திருப்பிற்கு பின் துபாய் கம்யூனிட்டி பார்க்கில் தஞ்சம் புகுந்திருந்த இலங்கை நாட்டை சேர்ந்த குழுவினருக்கு தற்போது நிவாரணம் கிடைத்துள்ளது.

- Advertisment -

இந்த ஆண்டு செப்டம்பர் முதல் அல் ஹுதைபா பார்க்கில், பல்வேறு இன்னல்களில் சிக்கி தவிக்கும் இலங்கையர்கள் குழு தஞ்சம் அடைந்திருப்பது இது இரண்டாவது முறையாகும். இந்த குழுவில் 10 பெண்களும் உள்ளனர். மேலும் சஹானா மற்றும் பார்க் அமைந்துள்ள பகுதியில் வசிப்பவர்கள் இவர்களுக்கு உணவு உள்ளிட்ட தங்களால் முடிந்த பொருட்களை கொடுத்து உதவுகிறார்கள். பூங்காவில் உள்ள பெஞ்சுகளிலும், சிலர் கொடுத்து உதவிய பாய்களிலும் இவர்கள் படுத்துறங்கி வருகின்றனர்.

இந்த குழுவில் விசிட் விசாவில் அமீரகம் வந்து வேலை தேடி தவிப்பவர்கள் மற்றும் காலாவதியான விசாக்களை கொண்டவர்களும் அடக்கம். உணவு வாங்க கூட காசில்லாமல் பல நாட்களாக பார்க்கில் தங்கி இருக்கும் இவர்களை அடிப்படை வசதிகளுடன் கூடிய தங்குமிடங்களுக்கு மாற்றுவதற்காக, இலங்கை மக்கள் நல்வாழ்வு அமைப்பான சஹானா (Sahana) மற்றும் துபாயில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் ஆகியவை இணைந்து முயற்சிகளை முன்னெடுத்துள்ளன.

இது பற்றி கூறியுள்ள சஹானா அமைப்பின் குழு உறுப்பினர் விஸ்வ திலகரத்னா, நாளைக்குள் (வியாழக்கிழமை) பார்க்கில் தவிக்கும் இலங்கையர்கள் குழு பாதுகாப்பான வீடுகள் மற்றும் தங்குமிடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சில கட்ட உதவிகளுக்கு பிறகு இந்த குழுவில் உள்ள சிலரால் இங்கு தங்க மற்றும் வேலை பார்க்க முடியும்.

நாடு திரும்ப விரும்புவோர் கொழும்பு திரும்பும் விமானத்தில் முன்னுரிமை பெற பூங்காவில் தங்கியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். துன்பத்தில் உள்ள இந்த் குழுவினருக்கு தினசரி உணவு, தண்ணீர் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பாக்ஸ்களை வழங்குகிறோம். உதவிகள் கட்டாயம் தேவைப்படுவோர் ஸ்கிரீனிங்கிற்கு பிறகு தங்குமிடங்களுக்கு மாற்றப்படுவர் என்றார்.

சில நாட்களுக்கு முன் கலீஜ் டையம்ஸிடம் ஒரு நேர்காணலில் பேசி இருந்த நலிந்தா விஜேரத்னா, மிஷன் ஸ்பான்சர் செய்யப்பட்ட தங்குமிடங்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 160 பேர் மட்டுமே தங்க முடியும். மேலும் திருப்பி அனுப்பும் முயற்சிகள் ஒரு சில காரணங்களால் மந்தமாக உள்ளது என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் நேற்று மொத்தம் 267 இலங்கையர்கள் நாடு திரும்பினர். இதற்காக இலங்கை வர்த்தக சபை, சஹானா மற்றும் இந்திய தொழிலதிபர் டி.என்.கிருஷ்ணகுமார் ஆகியோரின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் இதுவரை 9,200-க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அமீரகத்திலிருந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.