UAE Tamil Web

செவ்வாய் கிரகத்தை 135 மில்லியன் கி.மீ தூரத்திலிருந்து படம் பிடித்த ‘ஹோப்’.. டிவிட்டரில் ஷேர் செய்த துபாய் ஆட்சியாளர்

hope

அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், நாட்டின் ஹோப் விண்கலம் எடுத்து அனுப்பியுள்ள செவ்வாய் கிரகத்தின் சமீபத்திய புகைப்படத்தை ட்வீட் செய்துள்ளார்.

- Advertisment -

தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள ஷேக் முகமது, செவ்வாய் கிரகத்திற்கான பயணத்தில் அமீரகத்தின் மார்ஸ் மிஷன் எடுத்த சிவப்பு கிரகத்தின் புகைப்படம் இது. செவ்வாய் கிரகத்தில் இருந்து 135 மில்லியன் கி.மீ தூரத்திலிருந்து அமீரகத்தின் ஹோப் விண்கலம் இந்த படத்தை எடுத்துள்ளது.

ஹோப் விண்கலம் வரும் பிப்ரவரி 9, 2021 அன்று சிவப்பு கோளை எட்டும் என்று பதிவிட்டுள்ளார். கடந்த ஜூலையில் செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் அமீரகத்தின் ஹோப் விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அமீரகத்தின் இந்த செவ்வாய் கிரக ஆய்வு அரபு உலகில் இருந்து வந்த முதல் கிரக ஆய்வு ஆகும்.

துபாயிலுள்ள முகமது பின் ரஷீத் விண்வெளி மையத்திலுள்ள செயல்பாட்டுக் குழு விண்கலத்தின் நிலையை கண்காணிக்கிறது. விண்கலத்தின் துணை அமைப்புகளை சரிபார்க்கவும், குறுக்கீடுகளை அளவீடு செய்யவும், செயல்திறனைப் புரிந்து கொள்ளவும் இக்குழு வாரத்திற்கு 2 முதல் 3 முறை விண்கலத்துடன் தொடர்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.