UAE Tamil Web

துபாய் டூட்டி ஃப்ரீ ரேஃபிள்: 1 மில்லியன் டாலர் பரிசை வென்று கோடீஸ்வரரான இந்தியர்..

dubai

துபாயை சேர்ந்த இந்திய வெளிநாட்டவர் ஒருவர் துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லியனர் ரேஃபிள்(Dubai Duty Free Millennium Millionaire raffle) டிராவின் சமீபத்திய வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

- Advertisment -

கேரளாவை சேர்ந்த 46 வயதான இந்திய நாட்டவரான அனுப் பிள்ளை(Anub Pillai) துபாய் டூட்டி ஃப்ரீ டிராவில் 1 மில்லியன் டாலர் பரிசை(தோராயமாக 3.56 மில்லியன் திர்ஹம்ஸ்) வென்று கோடீஸ்வரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். 21 ஆண்டுகளாக துபாயில் வசித்து வரும் அனுப், கடந்த அக்டோபர் 4-ம் தேதி சீரிஸ் 341-ல் டிக்கெட் எண் 4512-ஐ ஆன்லைனில் வாங்கினார்.

இரு குழந்தைகளுக்கு தந்தையான அனுப் பிள்ளை, சர்வதேச கட்டிடம் மற்றும் உள்கட்டமைப்பு ஒப்பந்தக்காரர்களுக்கான சீனியர் எம்இபி(MEP) மேனேஜராக பணியாற்றுகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக துபாய் டூட்டி ஃப்ரீ பிரமோஷனில் பங்கேற்பதை வழக்கமாக வைத்திருந்தார். இறுதியாக இன்று அறிவிக்கப்பட்ட முடிவில் வெற்றியாளராக மகுடம் சூட்டியுள்ளார்.

1 மில்லியன் டாலர் பரிசை(இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.7 கோடி) தட்டி சென்ற மகிழ்ச்சியுடன் பேசிய அனுப், ” ஒரு அற்புதமான பிரமோஷனை இயக்கியதற்காக துபாய் டூட்டி ஃப்ரீக்கு மிகவும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். அமீரகத்தில் உள்ள பிற விளம்பரங்களை போலில்லாமல் துபாய் டூட்டி ஃப்ரீ, சீரிஸ் ஒன்றுக்கு 5,000 டிக்கெட்டுகளை மட்டுமே விற்பனை செய்வதன் நன்மை, என்னை போன்றவர்களுக்கு வெற்றி பெற சிறந்த வாய்ப்பை அளிக்கிறது”என்று தெரிவித்துள்ளார்.

துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லியனர் டிக்கெட் வாங்குபவர்களில் இந்தியர்களே அதிகம். கடந்த 1999-ம் ஆண்டில் துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லியனர் டிரா தொடங்கப்பட்டதில் இருந்து, 1 மில்லியன் டாலர் பரிசு தொகையை வென்றுள்ள 169-வது இந்தியர் அனுப் பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.