UAE Tamil Web

துபாய்: விசிட் விசாவில் அமீரகம் வந்த இந்தியரை காணவில்லை.! உதவி கோரிய நண்பர்கள்..

missing1

கடந்த சனிக்கிழமை(அக்டோபர் 31) முதல் துபாயில் காணாமல் போனதாக கூறப்படும் 31 வயது இந்தியரைக் கண்டுபிடிக்க அவரது நண்பர்கள் உதவி கோரியுள்ளனர்.

- Advertisment -

கேரளாவை சேர்ந்த ஆஷிக் செனோத் துரும்மல்(Ashik Chenoth Thurummal), கடந்த அக்டோபர் 15-ம் தேதி அமீரகத்திற்கு விசிட் விசாவில் வந்து சேர்ந்தார். அபுதாபி சூப்பர் மார்க்கெட்டில் விற்பனையாளராக வேலைக்கு செல்வதற்கு முன்பு, 14 நாள் குவாரன்டைனை முடிக்க அவர் காத்திருந்தார். இன்டர் நேஷனல் சிட்டியில், பெர்ஷியன் கிளஸ்டரில் உள்ள அவரது வசிப்பிடத்திற்கு அருகில் நீல நிற போலோ சட்டை, கருப்பு டிராக் பேன்ட் மற்றும் கருப்பு முகக்கவசம் அணிந்திருந்த நிலையில் ஆஷிக்கை கடைசியாக பார்த்துள்ளனர்.

அவரது நண்பர்களும் பிளாட் தோழர்களும் கூறுகையில், ஆஷிக் லேசான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறோம். இருப்பினும் அவரது மனச்சோர்வுக்கான சரியான காரணம் தெரியவில்லை என்று கூறியுள்ளனர். காணாமல் போனதாக கூறப்படும் நபர் பற்றி புகார் கொடுத்தவரும், துபாய் குடியிருப்பாளருமான அஹ்சன் சிஏ தெரிவித்துள்ள தகவலில்,என் சகோதரர் மற்றும் மற்றொரு பிளாட்மேட்டுடன் ஆஷிக் குடியிருப்பில் வசித்து வந்தார். ஆஷிக்என் சகோதரனின் நண்பர் ஆவார். மேலும் கடைசியாக அவர் வீட்டை விட்டு வெளியேறும்போது, தன்னுடன் எதையும் எடுத்து கொள்ளவில்லை. அவர் எங்கு சென்றிருப்பார் என்பது குறித்து எங்களுக்கு தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

missing2

அஹ்சன் கூற்றுப்படி, ஆஷிக் தனது அசல் பாஸ்போர்ட், தொலைபேசி, பணப்பையை மற்றும் பிற பொருட்களை வீட்டிலேயே விட்டு சென்றுள்ளார். ஆஷிகிற்கு உறவினர்கள் யாரும் இல்லாததால், அவரது நண்பர்கள் மற்றும் பிளாட்மேட்ஸ் உள்ளிட்டோர் உதவிக்காக கேரள முஸ்லீம் கலாச்சார மையம் (KMCC ) மற்றும் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஆகியோரை அணுகியுள்ளனர். ஆஷிக் பற்றிய அனைத்து விவரங்களும் தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரை கண்டுபிடிக்க தேவையான நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் என்று அஹ்சன் கூறியுள்ளார்.

நாங்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளோம். எனினும் அதிகாரப்பூர்வ புகார் இன்னும் பதிவு செய்யப்படவில்லை. இந்த வழக்கு குறித்து இந்திய துணைத் தூதரகத்திற்கும் தகவல் அளித்துள்ளோம். வழக்கமாக, காணாமல் போனவரின் உறவினர்கள் அல்லது முதலாளிகள் மட்டுமே காணாமல் போன நபரின் அறிக்கையை தாக்கல் செய்ய முடியும். ஆஷிக் வருகை விசாவில் இங்கு வந்திருப்பதால், சில நடைமுறை சிக்கலானவை என KMCC-ன் முன்னாள் தலைவரும், சமூக சேவையாளருமான அன்வர் நஹா கூறியுள்ளார்.

மேலும் தகவல் தெரிவித்துள்ள நஹா, ‘நாங்கள் காவல்துறையினருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம், அவர்கள் தங்களது ஆரம்ப கட்ட விசாரணையை முடித்துள்ளனர். அருகிலுள்ள அனைத்து சி.சி.டி.வி கேமராக்களையும் அவர்கள் சோதனை செய்துள்ளனர். ஆஷிக்கின் நண்பர்கள் அப்பகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் காவல் நிலையங்களுக்கும் சென்றுள்ளனர்’ என்றார்.

ஆஷிக் இருக்கும் இடம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், 055-8270999 என்ற எண்ணில் அஹ்சன் சிஏ-வை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.