UAE Tamil Web

15 ஆண்டுகள் தொடர் முயற்சி.! 1 மில்லியன் டாலர் பரிசை தட்டி சென்ற பஹ்ரைனில் வசிக்கும் இந்தியர்..

draw

பஹ்ரைனில் வசிக்கும் இந்திய வெளிநாட்டவர் ஒருவர் துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லியனர் ரேஃபிள்(Dubai Duty Free Millennium Millionaire raffle) டிராவில் பங்கேற்று,மெகா பணப்பரிசை வென்றுள்ளார்.

- Advertisment -

பஹ்ரைனிலேயே பிறந்து, வளர்ந்து அங்குள்ள மனாமாவில் வசிக்கும் 33 வயதான வயதான சுனில் குமார்கதுரியா(Sunil Kumarkathuria), கடந்த அக்டோபர் 17 அன்று மில்லினியம் மில்லியனர் டிராவின் சீரிஸ் 342-ல், டிக்கெட் எண் 3904-ஐ ஆன்லைனில் வாங்கினார். இந்த டிக்கெட்டிற்கு தான் தற்போது 1 மில்லியன் டாலர் பரிசு கிடைத்துள்ளது.

draw1

கடந்த15 ஆண்டுகளாக துபாய் டூட்டி ஃப்ரீ பிரமோஷனில் தவறாமல் பங்கேற்று வந்த குமார்கதூரியா, தனது தந்தை ஆன்லைனில் தேர்ந்தெடுத்த டிக்கெட் எண் தற்போது தன்னை கோடீஸ்வரனாக்கியுள்ளதாக உற்சாகம் தெரிவித்துள்ளார். “எனது கனவை நனவாக்கியதற்கு நன்றி துபாய் டூட்டி ஃப்ரீ, இந்த அற்புதமான பிரமோஷனின் பின்னால் உள்ள அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்” என்றார் குமார்கதூரியா.

மேலும் பேசிய அவர், ‘பல நல்ல விஷயங்களுக்காகவும், சேவைகளுக்காகவும் வெற்றி பணத்தை செலவிட விரும்புகிறேன். இந்த பணத்தை கொண்டு ஒருவேளை வீடு ஒன்றை கூட நாங்கள் வாங்கலாம். எனது பெற்றோருடன் கலந்துரையாடி 1 மில்லியன் டாலர் பணத்தை கொண்டு என்னவெல்லாம் செய்வது என்று திட்டமிடுவேன்’ என்று குறிப்பிட்டார்.

துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லியனர் டிக்கெட் வாங்குபவர்களில் இந்தியர்களே அதிகம். கடந்த 1999-ம் ஆண்டில் துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லியனர் டிரா துவங்கியதிலிருந்து, 1 மில்லியன் டாலர் பரிசு தொகையை வென்றுள்ள 170-வது இந்தியர் சுனில் ஆவார்.