அமீரகத்தில் கொரோனா பரவல் தொடரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றத் தவறியதற்காக துபாயில் 5 ஷிஷா கஃபேக்கள் மற்றும் ஒரு லாண்டரி கடை மூடப்பட்டுள்ளதாக துபாய் நகராட்சி அறிவித்துள்ளது.
சமீபத்தில் 2,310 வணிக நிறுவனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவற்றில் 2,270 கடைகள் கோவிட்-19 வழிகாட்டுதல்களுக்கு இணங்க ஏற்பாடுகள் செய்து இருப்பது கண்டறியப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#DubaiMunicipality closed 5 shisha cafes and one laundry for failing to comply with the precautionary measures. Violated 8 institutions, issued 26 warnings, while 2,270 institutions were eligible for the approved requirements during 2,310 visits on Nov 10. pic.twitter.com/4IjX6KBCk5
— بلدية دبي | Dubai Municipality (@DMunicipality) November 11, 2020
இதில் விதிகளை முறையாக பின்பற்ற தவறிய 40 கடைகளில், 8 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 26 பேருக்கு எச்சரிக்கைகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 6 கடைகள் அதாவது 5 ஷிஷா கஃபேக்கள் மற்றும் ஒரு லாண்டரி கடை அதிகாரிகளால் அதிரடியாக மூடப்பட்டுள்ளது.
மூடப்பட்ட ஷிஷா கஃபேக்கள் இன்டர்நேஷனல் சிட்டி மற்றும் டிரேட் சென்டர் 1 ஆகிய பகுதிகளிலும், சலவை கடை ஹோர் அல் அன்ஸ் பகுதியிலும் அமைந்திருந்தன.