UAE Tamil Web

தனக்கு குழந்தை பிறந்ததை கொண்டாடிய நபரை கைது செய்த துபாய் போலீஸ்.! என்ன காரணம்.?

dubai

துபாயில் தனக்கு குழந்தை பிறந்ததை கொண்டாடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தன் குழந்தையின் பிறப்பை கொண்டாடுவதற்காக சமூகத்திற்கு ஆபத்தான வகையில் அவர் செய்த செயலே போலீஸாரின் கைது நடவடிக்கைக்கு காரணமாக அமைந்து விட்டது.

- Advertisment -

தனக்கு புதிய குழந்தை பிறந்து விட்டது என்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த அந்த நபர், உற்சாகமிகுதியில் துபாயில் குடியிருப்பு பகுதி ஒன்றில் ஆபத்தான முறையில் பட்டாசுகளை வெடித்து கொண்டாடியுள்ளார். பட்டாசுகள் வெடித்ததால் சில பொருட்களுக்கு சிறியளவிலான சேதங்களும் ஏற்பட்டுள்ளது.

தனது கொண்டாட்ட வீடியோவை சமூக ஊடங்கங்களில் அவர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகியது. வைரலாகிவிட்ட வீடியோ அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இதனை அடுத்து குறிப்பிட்ட நபர் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர குறைபாடுகள் கூட ஏற்படக்கூடும் என்பதால், பட்டாசுகளை பயன்படுத்துவதை எதிர்த்து குடியிருப்பாளர்களை காவல்துறை எச்சரித்துள்ளது.