UAE Tamil Web

ஒரேயொரு வாட்சாப் மெசேஜ் ; 40,500 திர்ஹம்ஸ் பணம் அபேஸ்..!

whatsapp

துபாயில் மசாஜ் மோகத்திற்கு இரையான ஆண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இன்றும் துபாய் நீதிமன்றத்தில் மசாஜ் செய்வதாகக்கூறி பாக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நபரிடம் இருந்து 40,500 திர்ஹம்ஸ் கொள்ளையடித்த நைஜீரிய பெண் மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அந்தப் பெண்ணிற்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அதைத்தொடர்ந்து அப்பெண் நாடுகடத்தப்படவேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

ரஷிய பெண்

40 வயதான பாகிஸ்தான் நபர் தனது வாட்சாப் நம்பருக்கு வந்த மெசேஜ் ஒன்றினைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். காரணம், இளம் ரஷியப் பெண் ஒருவரின் புகைப்படம் அதில் இருந்திருக்கிறது. கீழேயே மசாஜிற்கு அணுகவும் என்ற வரியும்.

பாவப்பட்ட பாகிஸ்தான் ஆசாமியும் ஆசை ஆசையாய் மெசேஜில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு சென்றிருக்கிறார். நைஃப் பகுதியில் இருந்த அந்த கட்டிடத்தின் காலிங்பெல்லை அடித்து கனவுகளுடன் அவர் காத்திருக்க 27 வயது நைஜீரியப் பெண் ஒருவர் கதவைத் திறந்திருக்கிறார்.

திகைத்துப் போய் நின்றிருந்த பாக்கிஸ்தான் நபரை உள்ளே இழுத்துச் சென்ற பெண், சரமாரியாக தாக்கத் துவங்கியிருக்கிறார். சற்று நேரத்திற்குள் கூடுதலாக இரண்டு பெண்களும் 3 ஆண்களும் அங்கு வந்திருக்கிறார்கள். தன்னை காப்பாற்றத்தான் வந்திருக்கிறார்கள் என பாக்கிஸ்தான் நபர் ஒரு நிமிடம் நிம்மதி அடைந்திருக்கிறார். ஆனால் அதற்குப் பின்னர் தான் விவரமே அவருக்குப் புரிந்திருக்கிறது.

ஆறு பேரும் சேர்ந்து தாக்கத் துவங்கவே என்ன செய்வதென்று தெரியாமல் கூச்சலிட்டிருக்கிறார் அவர். அவரிடம் இருந்த 500 திர்ஹம்ஸ் பணம் மற்றும் அவரது கிரெடிட் கார்டை கும்பல் பறித்திருக்கிறது. கார்டு நம்பரைச் சொல்லும்படி டார்ச்சர் செய்யவே வேறு வழியில்லாமல் அவரும் சொல்லியிருக்கிறார்.

ஆக மொத்தம் 40,500 திர்ஹம்ஸ் பணத்தை ஆட்டையைப் போட்ட பின்னர் பாக்கிஸ்தான் ஆசாமியை விடுவித்திருக்கிறது கும்பல். நேரடியாக காவல்நிலையத்திற்குச் சென்ற பாதிக்கப்பட்டவர் தனக்கு நேர்ந்த குரூரம் பற்றி புகார் அளித்திருக்கிறார்.

இதனையடுத்து அவர் தெரிவித்த இடத்திற்கு விரைந்த காவல்துறை அங்கு நைஜீரிய பெண்ணை கைது செய்திருக்கிறது. தனது குற்றத்தை அவரும் ஒப்புகொண்டிருக்கிறார்.

நீதிமன்றம் கூடுதலாக அவருக்கு 28,120 திர்ஹம்ஸ் அபராதம் விதித்திருக்கிறது.

whatsapp
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap