fbpx
UAE Tamil Web

டாப் பிராண்டுகளுக்கு 90% வரை அதிரடி தள்ளுபடி.! துபாய் மாலில் 3 நாட்கள் நடைபெறும் மெகா சேல்..

Dubaimall

துபாய் ஃபிட்னஸ் சேலஞ்சின் தொடக்கத்தை கொண்டாடும் விதமாக உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக பார்வையாளர்களை ஈர்த்துள்ள ரீடெய்ல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இடமான தி துபாய் மாலில் மெகா விற்பனை திருவிழா நடைபெற உள்ளது.

அக்டோபர் 29 முதல் 31 வரை நடைபெற உள்ள இந்த சலுகை விற்பனையில், நூற்றுக்கணக்கான ரீடெய்ல் விற்பனையாளர்கள் விளையாட்டு, சுகாதாரம் மற்றும் ஹெல்த் பிராண்ட் பொருட்களுக்கு, 90% வரையும், ஃபேஷன், அழகு சாதன பொருட்கள் , நகைகள் மற்றும் பலவற்றுக்கு 75% வரையும் தள்ளுபடி வழங்க உள்ளனர்.

இந்த மெகா விற்பனை மூன்று நாட்களும் காலை 10 மணிக்கு துவங்கி,  நள்ளிரவு வரை நடைபெற உள்ளது. ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை மிச்சப்படுத்தும் டீல்களை ஏறக்குறைய நாளொன்றுக்கு 14 மணிநேரங்கள் வழங்குகிறது.

அக்டோபர் 30 முதல் நவம்பர் 28 வரை நடைபெற உள்ள துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் என்பது உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தின் வருடாந்திர கொண்டாட்டமாகும். ஒவ்வொரு நாளும் 30 நிமிட உடற்பயிற்சி நடவடிக்கைகளை, தொடர்ந்து 30 நாட்கள்( 30 நிமிடங்கள், 30 நாட்கள்) செய்து முடிப்பதே இந்த ஃபிட்னஸ் சேலஞ்ச் நிகழ்வு.

குடியிருப்பாளர்களை ஆரோக்கியமாக இருக்க ஊக்குவிப்பதுடன், அமீரகத்தை உலகின் மிகச் சுறுசுறுப்பான நாடுகளில் ஒன்றாக மாற்றுவதும் இந்த ஃபிட்னஸ் சேலஞ்சின் நோக்கம் ஆகும். வாடிக்கையாளர்கள் இந்த சலுகை கால விற்பனையின் போது தி துபாய் மால் ஆப் மூலம் எமிரேட்ஸ் ஸ்கைவர்ட் மைல்களை(Emirates Skyward Miles) செலவு செய்து கொள்ளவும், பெறவும் முடியும்.

100 திர்ஹம்ஸ் மேல் செலவு செய்து பொருள் வாங்குவோர் அந்த ரசீதை ஆப் மூலம் ஸ்கேன் செய்து எமிரேட்ஸ் ஸ்கைவர்ட் மைல் எனப்படும் வெகுமதி நாணயத்தை(reward currency) சம்பாதிக்க முடியும்.