UAE Tamil Web

கொரோனா எத்தனை இடர்களை அளித்தாலும் அமீரகம் அதிலிருந்து வெளியேறும்; சரித்திரம் படைக்கும் : துபாய் ஆட்சியாளர்..!

sheikh mohammed

அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், மெய்தான் ரேஸ்கோர்ஸில் (Meydan racecourse) நேற்று நடைபெற்ற சூப்பர் சாட்டர்டே (Super Saturday) போட்டியை கண்டுகளித்தார். துபாய் உலகக்கோப்பை நடைபெற இருப்பதை முன்னிட்டு இப்போட்டிகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது,

- Advertisment -

உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களிடம் அமீரகத்தில் மீண்டும் குதிரைப் பந்தயத்தை பொலிவுபெற செய்வதின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார் ஷேக் முகமது.

“கொரோனா எத்தனை அழுத்தங்களைத் தந்தாலும் நாம் அதிலிருந்து மீண்டு சரித்திரம் படைத்திட வேண்டும்.  பொருளாதாரம், மருத்துவம், சுகாதாரம் மற்றும் ஓய்விட வசதிகள் உள்ளிட்ட அனைத்து துறைகளும் பாதுகாப்பான முறையில் இயல்பு நிலைக்குத் திரும்பிட அமீரகம் கடுமையாக உழைத்துவருகிறது. சமூகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்வதை நோக்கமாகக்கொண்டு அமீரகம் இயங்கிவருகிறது” என ஷேக் முகமது தெரிவித்தார்.

ஏழு சுற்றுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு எமிரேட்ஸ் உள்ளிட்ட ஸ்பான்சர்கள் பரிசுகளை வழங்கினர்.