UAE Tamil Web

ஷேக் ஹம்தான் மறைவு: துபாய் ஆட்சியாளரிடம் இரங்கல் தெரிவித்த வளைகுடா நாட்டு மன்னர்கள்..!

Sheikh-Mohammed-Bin-Rashid-Al-Maktoum

துபாயின் துணை ஆட்சியாளரும் அமீரக நிதியமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் நேற்று காலமானார். இதனைத் தொடர்ந்து அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களுக்கு வளைகுடா நாடுகளின் மன்னர்கள் தொலைபேசி வழியாக தங்களது இரங்கலைத் தெரிவித்தனர்.

- Advertisment -

சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத், ஓமானின் ஆட்சியாளர் சுல்தான் ஹைதாம் பின் தாரிக் அல் சைத், கத்தார் நாட்டின் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தானி ஆகியோர் தொலைபேசி வாயிலாக துபாய் ஆட்சியாளரைத் தொடர்புகொண்டு, ஷேக் ஹம்தானை இழந்துவாடும் மக்தூம் குடும்பம் மற்றும் அமீரக மக்களுக்கு அல்லா நம்பிக்கையையும் மன அமைதியையும் தரட்டும் என்றனர்.

சகோதர நாடுகளைச் சேர்ந்த ஆட்சியாளர்களின் உண்மையான அன்பிற்கு துபாய் ஆட்சியாளர் நன்றி தெரிவத்தார். மேலும், ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களது நாட்டு மக்கள் பாதுகாப்புடன் நீடூடி வாழ வாழ்த்துவதாகவும் துபாய் ஆட்சியாளர் தெரிவித்தார்.