UAE Tamil Web

துபாய்: காவல் நிலையம் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையங்களுக்குச் செல்ல PCR பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்..!

Dubai Police

துபாய்: காவல் நிலைய தலைமை அலுவலகம், காவல் நிலையம் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையங்களுக்குச் செல்வோர், PCR பரிசோதனை செய்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தப் புதிய நடைமுறை பிப்ரவரி 13 ஆம் தேதிமுதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் உள்ள காவல்துறை அலுவலகம் மற்றும் அதற்குச் சொந்தமான பிற கட்டிடங்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையங்களுக்குள் நுழைய நெகட்டிவ் PCR பரிசோதனை சான்றிதழ் அவசியம் என துபாய் அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு 48 மணி நேரத்திற்குள் மேற்கண்ட இடங்களுக்கு மக்கள் செல்லலாம். கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றவர்களுக்கு இந்த நடைமுறையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் காவல்துறையின் அப்ளிகேஷனையோ அல்லது இணையதளத்தையோ அணுகி தங்களுக்கான சேவைகளைப் பெறலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. அதேபோல, பணப் பரிவர்த்தனைக்கு மக்கள் ஸ்மார்ட் போலீஸ் ஸ்டேஷனைப் பயன்படுத்தலாம் எனவும் அவசரமில்லாத சேவைகளைப் பெற 901 என்ற எண்ணிற்கு அழைக்குமாறும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.