UAE Tamil Web

துபாய்: 500 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் 12 கி.மீ கடற்கரைகள் உருவாக்கப்படும்.! ஷேக் முகமது அறிவிப்பு

beach

துபாய் கடல் எல்லையில் 12 கி.மீ நீளத்திற்கு கடற்கரைகளை உருவாக்கும் திட்டத்திற்கு அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

- Advertisment -

இந்த திட்டம் அல் மம்சார் பீச்சிலிருந்து (Al Mamzar Beach ), உம் சுகீம் II(Umm Suqeim II) வரை 1 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு மதிப்பிடப்பட்டுள்ள திட்ட செலவு 500 மில்லியன் திர்ஹம்ஸ் ஆகும்.தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் நீச்சலுக்கான பகுதிகளை விரிவுப்படுத்துகிறது. மேலும் சிறந்த ஓடு பாதைகள் மற்றும் நீண்ட சைக்கிள் வீதிகளை உள்ளடக்கியது.

மேலும் துபாய் ஆட்சியாளர் 2 பில்லியன் திர்ஹம்ஸ் மதிப்புள்ள 29 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இது 8 மில்லியன் சதுர மீட்டர் பசுமையான இடங்களையும், தோட்டங்களையும் துபாயில் புதிதாக ஏற்படுத்த உள்ளது.

இது தொடர்பாக ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ள ஷேக் முகமது, “துபாயின் குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளுக்குள், 2 பில்லியன் திர்ஹாம் மதிப்புள்ள 8 மில்லியன் சதுர மீட்டர் பசுமையான இடங்களையும், தோட்டங்களையும் சேர்க்க 29 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாங்கள் தொடர்ந்து எங்கள் நகரத்தை அபிவிருத்தி செய்கிறோம், தொடர்ந்து எங்கள் வாழ்க்கைத் தரத்தை வளர்த்துக் கொள்கிறோம்”என்று குறிப்பிட்டுள்ளார்.