39.2 C
Dubai
September 22, 2020
UAE Tamil Web

துபாயில் அமைய உள்ள மிக பிரமாண்டமான ஷாப்பிங் மால் “சிலிக்கான் சென்ட்ரல்”.. ஒரு பார்வை

silicon

சுற்றுலா பயணிகளுக்கு சொர்கபூமியாக திகழும் அமீரகத்தின் மிக முக்கிய எமிரேட்டான துபாயில், 11 கால்பந்து மைதானங்களின் அளவுடைய மிக பெரிய ஷாப்பிங் மால் வர உள்ளது.

“சிலிக்கான் சென்ட்ரல்”(Silicon Central) என்றழைக்கப்படும் இந்த திட்டம், துபாய் சிலிக்கான் ஒயாசிஸுக்கு அருகிலுள்ள துபாய் அல் அய்ன் சாலையில், 11-க்கும் மேற்பட்ட கால்பந்து மைதானங்களை ஒன்று சேர்த்தது போல பிரமாண்ட அளவில் கட்டமைக்கப்பட உள்ளது.

விதவிதமான உணவகங்கள்..

இந்த பிரமாண்ட ஷாப்பிங் மாலில், சுமார் 81,500 சதுர மீட்டர் (8.1 ஹெக்டேர்) இடத்தில் 220 ரீடெய்ல் ஸ்டோர்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் 9,000 சதுர மீட்டர் அளவிற்கு ஹைப்பர் மார்க்கெட்(hypermarket) மற்றும் 7,800 சதுர மீட்டர் இடத்தில் டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஆகியவையும் அடங்கும்.சிலிக்கான் சென்ட்ரலானது ஷாப்பிங் கடைகளை மட்டுமல்லாமல் 24 சாதாரண உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். தவிர 21 ஃபுட் கோர்ட்களும்(food court) இங்கு அமைய உள்ளது.

பொழுது போக்கும், மிக பெரிய கார் பார்க்கிங்கும்..

மேலும் இந்த மிக பெரிய சிலிக்கான் சென்ட்ரலில் 12 திரைகள் கொண்ட சினிமா, 6,800 சதுர மீட்டர் அளவில் குடும்ப பொழுதுபோக்கு மையம்(Family Entertainment Centre), குழந்தைகள் மற்றும் வளர்ந்து வரும் குழந்தைகள் என இருவரும் சுறுசுறுப்பாக இருக்க 2,000 சதுர மீட்டர் அளவில் புதிய தலைமுறை பொழுதுபோக்கு மையம்(New Generation Entertainment Centre), ஆரோக்கியமான சமூகத்தை வடிவமைக்க 2,500 சதுர மீட்டர் உடற்பயிற்சி மையமும் அமைக்கப்பட உள்ளன. ஒரே நேரத்தில் 3,500 கார்களை பார்க் செய்து கொள்ளும் வசதியும் உண்டு.

வித்தியாசமான ஷாப்பிங் அனுபவம்..

மிக பிரமாண்டமாக உருவாகி வரும் “சிலிக்கான் சென்ட்ரல்” குடும்பங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை தேபடுபவர்களுக்கு மிக சிறந்த இடமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிலிக்கான் சென்ட்ரல் டெவலப்பரான லைன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் & பிராபர்ட்டி எல்.எல்.சி(Line Investments & Property LLC) நிறுவனம் இது பற்றி கூறுகையில், ” வித்தியாசமான ஷாப்பிங் அனுபவம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் சிலிக்கான் சென்ட்ரலில் நிறைந்திருக்கும்”என்று குறிப்பிட்டுள்ளது. LIP அபுதாபியை தளமாகக் கொண்ட லுலு குரூப் இன்டர்நேஷனலின் ஷாப்பிங் மால் மேம்பாடு மற்றும் மேலாண்மை பிரிவு ஆகும்.

லுலு குழுமத்தின் சர்வதேச இயக்குனர் சலீம் எம்.ஏ கூறுகையில், “எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் கூட்டாளர்களுக்கும் ரீடெய்ல் அனுபவத்தை மேம்படுத்துவதும், எங்கள் நிறுவனம் பணியாற்றும் அனைத்து மால்களுக்கும் விருதுகளைப் பெறுவதும் எங்களது நோக்கமாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Silicon Central Dubai Map

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!