UAE Tamil Web

துபாய் மக்கள் கவனத்திற்கு: மருத்துவ நிபுணர்களிடம் இனி ஆன்லைனில் இலவச ஆலோசனை.! யாரெல்லாம் பயன்பெறலாம், எப்படி.? DHA வெளியிட்ட புதிய அறிவிப்பு

DHA

இனி துபாயில் உள்ள நோயாளிகள் மருத்துவ நிபுணர்களிடமிருந்து இலவச ஆன்லைன் இரண்டாவது மருத்துவ கருத்து(second medical opinion) அல்லது பகுப்பாய்வு(analysis) கேட்கலாம் என்று DHA-வை சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

- Advertisment -

துபாயில் நடைபெற்று வரும் GITEX தொழில்நுட்ப நிகழ்வில் DHA சுகாதார சுற்றுலாத் துறை இயக்குநர் முகமது அல் மெஹ்ரி இது பற்றி பேசுகையில், மேற்கண்ட இந்த ஆன்லைன் வசதி மகளிர் மருத்துவம், இருதயவியல், எலும்பியல், ஐவிஎஃப் மற்றும் கருவுறுதல் சிகிச்சைகள், நரம்பியல், புற்றுநோயியல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட ஏழு மருத்துவ பிரிவுகளுக்கு கிடைக்கும்.

இந்த சேவையை வழங்க மருத்துவ துறையில் அதிக தகுதி மற்றும் அங்கீகாரம் பெற்ற DHA சுகாதார சுற்றுலாத் துறை மற்றும் DXH குழுவின் உறுப்பினர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். இவர்கள் இந்த இரண்டாவது மருத்துவ கருத்து சேவையை எளிதாக்குகின்றனர்.

இந்த சேவையை பெற விரும்பும் நோயாளிகள் தங்களது சமீபத்திய மருத்துவ அறிக்கைகள் மற்றும் நோய் கண்டறியும் அறிக்கை உள்ளிட்ட முழுமையான ரிப்போர்ட்களை வழங்கியவுடன், இரண்டு வேலை நாட்களுக்குள் இரண்டாவது மருத்துவ கருத்துக்கள் வழங்கப்படும் என்று அதிகாரி அல் மெஹ்ரி கூறினார். நோயாளியின் விவரங்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்பட்டு, மருத்துவ பதிவுகள் சம்பந்தப்பட்ட நிபுணர்களுடன் மட்டுமே பகிரப்படும் என்று அவர் கூறினார்.

ஆன்லைனில் இரண்டாவது மருத்துவ கருத்தை பெறுவது எப்படி.?

Www.dxh.ae என்ற வெப்சைட்டிற்கு சென்று பதிவு செய்யுங்கள்.

இரண்டாவது மருத்துவ கருத்தை பெற துபாயில் பட்டியலிடப்பட்ட medical provider /speciality-ஐ தேர்வு செய்யவும்.

பின்னர் DXH SMO கோரிக்கை படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் முன்னணி மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களிடமிருந்து இரண்டாவது மருத்துவ கருத்திற்கான கோரிக்கையை அனுப்புங்கள்.