UAE Tamil Web

துபாய்: போக்குவரத்து அபராதங்களை போனிலிருந்தே தவணையில் கட்ட புதிய சேவை அறிமுகம்..

fine

துபாய் போலீஸின் ஸ்மார்ட் அப்ளிகேஷன் மூலம் இப்போது போனிலிருந்தே தவணை முறையில் போக்குவரத்து அபராதங்களை செலுத்தலாம். இதற்கு ஏதுவான ஒரு முயற்சி துபாய் போலீஸால் தொடங்கப்பட்டுள்ளது.

- Advertisment -

இந்த புதிய முயற்சி பற்றி கருத்து தெரிவித்துள்ள நிர்வாக விவகாரங்களுக்கான உதவி கமாண்டர் மேஜர் ஜெனரல் அல் சலால் சயீத் பின் ஹுவைதி அல் ஃபலாசி, 100% தானியங்கி ஸ்மார்ட் சேவை வாடிக்கையாளர்கள் அவர்களின் போக்குவரத்து அபராதங்களை தவணை முறையில் செலுத்த அனுமதிக்கும். இந்த சேவையை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த புதிய திட்டம் அமீரக மத்திய வங்கி மற்றும் துபாய் இஸ்லாமிக் வங்கி ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. ஒரு ஓட்டுநர் தனது அபராதத்தை வங்கி மூலம் செலுத்த முடியும், அதற்காக எந்த வட்டியையும் வங்கி வசூலிக்காது. வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை வழங்கும் துபாய் அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப இந்த ஸ்மார்ட் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரி அல் ஃபலாசி கூறியுள்ளார்.

சேவை செயல்படுவது எவ்வாறு.?

துபாய் காவல்துறையில் போக்குவரத்து அபராதம் வசூல் பிரிவு இயக்குனரான கேப்டன் ஹுசேன் அல் அப்தூலி ஸ்மார்ட் சேவை எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி விளக்கியுள்ளார். போக்குவரத்து அபராதம் செலுத்தும் சேவையில் வாடிக்கையாளர்கள் லாக்இன் செய்து அதனுள் தவணை முறையில் அபராதம் கட்டும் விருப்பத்தை தேர்வு செய்யலாம்.

பின் வாடிக்கையாளர்கள் அதில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு, தேவையான தனிப்பட்ட விவரங்களுடன் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும். அந்த படிவம் பூர்த்தி செய்யப்பட்டு அனுப்பப்பட்ட பிறகு, வாடிக்கையாளரின் கோரிக்கை சென்ட்ரல் வங்கியை அடைகிறது. அந்த கோரிக்கைக்கு வங்கி ஒப்புதல் அளித்த பின் போக்குவரத்து அபராதத் தொகைக்கான தவணை முறை துவங்கும்.

வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து மாதந்தோறும் போக்குவரத்து அபராதங்களுக்கான தவணைத் தொகை கழிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.