UAE Tamil Web

“உங்களுடைய அர்ப்பணிப்பிற்கும், தியாகத்திற்கும் நன்றி” – துபாய் இளவரசர் வெளியிட்ட நெகிழ்ச்சியான கடிதம்..!

sheikh-hamdan,-dubai,-uae,-schools-reopen,-covid-19,-distance-learning,-work-from-home

கொரோனா காலத்திலும் மக்களின் தேவைகளுக்காக உழைத்த துபாய் அரசுப் பணியாளர்களுக்கு துபாய் இளவரசரும் துபாய் நிர்வாக கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் உருக்கமான கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

- Advertisment -

அதில்”உங்களுடைய அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் உறுதிக்கு நன்றி” என இளவரசர் குறிப்பிட்டிருக்கிறார்.

2020 ஆம் ஆண்டின் பல இன்னல்களில் இருந்து துபாயை மீட்க போராடிய அனைத்து ஊழியர்களுக்கும் தனது நன்றியை இளவரசர் தெரிவித்திருக்கிறார்.

“2021 வளமாகவும் ஒளி பொருந்தியதாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த வருடத்திற்கு விடைகொடுப்போம். நம்பிக்கை, உறுதியின் மூலமாக தடைகளைத் தகர்த்து நமது இலக்கை நோக்கிச் செல்வோம். இந்த உலகத்தினர் அனைவருக்கும் அமீரகத்திலிருந்து புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என ஷேக் ஹம்தான் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.