துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு புர்ஜ் கலீஃபா அருகேயுள்ள பல்வேறு சாலைகளை இன்று பிற்பகல் 4 மணிமுதல் மூடியுள்ளதாக அறிவித்திருக்கிறது.
அதேபோல புத்தாண்டு மலரும் இரவில் புர்ஜ் கலீஃபாவில் நிகழும் வான வேடிக்கைகளைக் காண கார்களில் வருகைதரும் பார்வையாளர்களுக்காக 16,700 கூடுதல் பார்க்கிங் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக RTA அறிவித்துள்ளது.
புதிய ஸபீல் எக்ஸ்டென்ஷன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த கூடுதல் பார்க்கிங் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக RTA தெரிவித்துள்ளது.
For your comfort, you can use the 16700 extra parking spots near the Burj Khalifa area.#MyDubaiNewYear pic.twitter.com/1htZ6mKELD
— RTA (@rta_dubai) December 31, 2020