பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரத்திலிருந்து நேற்று இரவு எமிரேட்ஸ் ஸ்கை கார்கோ விமானம் மூலமாக ஃபைசர் கொரோனா தடுப்பு மருந்து துபாய் வந்தடைந்தது.
இதனையடுத்து தேசிய அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உச்ச சபை இன்று முதல் இலவச தடுப்பூசி வழங்கும் திட்டத்தை துவங்க இருப்பதாகத் தெரிவித்திருந்தது.
அதன்படியே, பொதுமக்களுக்கு ஃபைசர்-பயோஎன்டெக் (Pfizer-BioNTech) கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்கும் திட்டத்தை இன்று துபாய் சுகாதார ஆணையம் (DHA) துவங்கி வைத்தது. இந்த திட்டத்தில் இணைந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்களின் பெயர்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது துபாய் ஊடக அலுவலகம்.
இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்.
- மூத்த குடிமகனான அலி சலீம் அலி அலாதிதி.
- துபாய் ஆம்புலன்சில் பணிபுரியும் ஷாமா சைஃப் ரஷீத் அலாலிலி.
- DHA வில் செவிலியராகப் பணிபுரியும் ஆஷா சூசன் பிலிப்.
- RTA வில் ஓட்டுனராகப் பணிபுரியும் ஆசிஃப் கான் ஃபாசில் சுபான்.
- துபாய் காவல்துறையில் பணியாற்றும் அதேல் ஹசன் ஷுக்ரல்லா.
துபாய் சுகாதார ஆணையம் அளித்த தகவலின்படி தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் அதற்காக முன்பதிவு செய்திருக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்வதுபற்றித் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
.@DHA_Dubai, in coordination with #Dubai’s Supreme Committee of Crisis & Disaster Management, & the COVID-19 Command & Control Centre, begins COVID- 19 vaccination ‘Pfizer- BioNTech’ campaign. pic.twitter.com/nWlnv7Tkue
— Dubai Media Office (@DXBMediaOffice) December 23, 2020