29.1 C
Dubai
October 30, 2020
UAE Tamil Web

குளோபல் வில்லேஜ் விருந்தினர்களுக்காக சொகுசு பேருந்து(deluxe Volvo) சேவை.. RTA அறிவிப்பு

dubai

குளோபல் வில்லேஜிற்கு(Global Village) அக்டோபர் 25 முதல் பொது பேருந்து சேவை மீண்டும் தொடங்கும் என்று RTA அறிவித்துள்ளது. 2020-2021 சீசனில் கீழ்காணும் 4 வழித்தடங்களில் குளோபல் வில்லேஜிற்கு பேருந்து சேவைகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. ரஷீதியா மெட்ரோ நிலையத்திலிருந்து(Rashidiya Metro Station) ரூட் 102
  2. யூனியன் மெட்ரோ நிலையத்திலிருந்து(Union Metro Station) ரூட் 103
  3. அல் குபைபா பேருந்து நிலையத்திலிருந்து(Al Ghubaiba Bus Station) ரூட் 104
  4. மால் ஆஃப் எமிரேட்ஸ் மெட்ரோ நிலையத்திலிருந்து(Mall of Emirates Metro Station) ரூட் 106

மேலும் அக்டோபர் 25 முதல் குளோபல் வில்லேஜிற்குள் பாரம்பரிய மின்சார படகு(electric abra) சுற்றுலா சேவைகளை துவக்க உள்ளதாகவும் RTA குறிப்பிட்டுள்ளது. RTA-வின் தலைமை நிர்வாக அதிகாரி அகமது ஹாஷிம் கூறுகையில், “கோவிட் தொற்றிலிருந்து பயணிகள், டிரைவர்கள், ஊழியர்கள் ஆகியோரை பாதுகாக்க, பொது பேருந்துகள் மற்றும் நிலையங்களில் சுகாதார நடவடிக்கைகளை எடுக்கப்பட்டிருப்பதை நாங்கள் உறுதி செய்வோம். குளோபல் வில்லேஜிற்கு செல்லும் பயணிகளுக்கு உயர்பாதுகாப்பு மற்றும் புதிய பயண அனுபவத்தை அளிக்க டீலக்ஸ் வோல்வோ ரக சொகுசு பேருந்துகளை (deluxe Volvo coaches) பயன்படுத்துவோம்” என கூறியுள்ளார்.

இந்த சீசனில் குளோபல் வில்லேஜ் வரும் விருந்தினர்களுக்கு சேவை செய்ய 3 மின்சார படகுகளை இயக்கும் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 சீசன்களில் பார்வையாளர்களிடையே இந்த சேவை மிகவும் பிரபலமானது. விறுவிறுப்பான அனுபவத்தை அளிக்கும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் இயக்கப்படும் மின்சார படகு சேவையை துவக்க RTA ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தொற்றுக்கு மத்தியிலும் இந்த சுற்றுலா சீசனில் விருந்தினர்களுக்கு சேவை செய்வதில், குளோபல் வில்லேஜுடனான RTA-வின் பங்களிப்பிற்கு அகமது ஹாஷிம் பாராட்டு தெரிவித்துள்ளார். குளோபல் வில்லேஜானது சர்வதேச நாடுகளிலிருந்து, அமீரகத்திற்கு வரும் குடியிருப்பாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கணிசமான எண்ணிக்கையில் தொடர்ந்து ஈர்க்கிறது. குடும்பங்களுக்கும், நண்பர்களுக்கும் உற்சாகமான நிகழ்வுகள், விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்குகளை அளித்து அவர்களது நேரத்தை மிகவும்சுவாரஸ்யமாக்குகிறது என்றார்.

குளோபல் வில்லேஜின் தலைமை நிர்வாக அதிகாரியான பேடர் அன்னோஹி, ” குளோபல் வில்லேஜின் வெள்ளி விழா பருவத்தை தொடங்குவதற்கான முனைப்புடன் தயாராக உள்ளோம். விருந்தினர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு எங்கள் முன்னுரிமையாக உள்ளது. RTA-வுடன் இணைந்து செயல்படுவது குறித்து பெருமையடைகிறோம். எங்கள் விருந்தினர்கள் குளோபல் வில்லேஜிற்கு வரும் போதும், புறப்படும் போதும் அவர்களின் இனிமை அனுபவத்தை உறுதிசெய்யும் RTA-வின் சேவை மற்றும் செயல்திறனில் பெரிதும் நம்பிக்கை கொண்டுள்ளோம்”என கூறியுள்ளார்.



error: Alert: Content is protected !!