UAE Tamil Web

துபாயில் முக்கிய சாலைகளை மூடிய RTA – மாற்று வழிகள் அறிவிப்பு..!

DUBAI

துபாயில் அயர்ன்மேன் 70.3 2021 ட்ரையத்லான் சேம்பியன்ஷிப் போட்டி இன்று நடைபெறுவதை முன்னிட்டு பல முக்கிய சாலைகளை மூடுவதாக துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

மூடப்படும்  சாலைகளும் நேரங்களும்

ஜுமேய்ரா சாலை – வடக்கிலிருந்து செல்லும் அல் தனியா சாலை –  காலை 7 மணிமுதல் 9 மணிவரையில் (குறிப்பிட்ட அளவு வாகனங்கள் செல்ல அனுமதியளிக்கப்படும்)

அல் தனியா சாலை –  காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரையில் மூடப்படும்

ஜுமேய்ரா சாலை – அல் சுஃபோ சாலையில் இருந்து உம் சகேம் சாலை செல்லும் சாலை காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரையில் (ஜுமேய்ரா சாலை நுழைவு மூடப்படும்)

உம் சகேம் சாலை – அல் சுஃபோ சாலை காலை 7 மணிமுதல் மதியம் 1 மணிவரையில் (அல் சுஃபோ சாலைக்குச் செல்லும் இடதுபுற வழி மூடப்படும்)

துபாய் ஷேக் சயீத் சாலை – தெற்கு அல் சுஃபோ சாலை காலை 7 மணிமுதல் 9.30 மணிவரையில் மூடப்படும்.

அபுதபியிலிருந்து வரும் ஷேக் சயீத் சாலை – வடக்கு உம் சகேம் சாலை காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரையில் மூடப்படும்.

அல் பர்ஷா எக்ஸிட்டிலிருந்து உம் சகேம் சாலை காலை 7 மணிமுதல் மதியம் 1 மணிவரையில் மூடப்படும். (வலப்பக்க திருப்பத்தில் மட்டுமே செல்லலாம்)

தெற்கு அல் பர்ஷா நுழைவிலிருந்து உம் சகேம் சாலை காலை 7 மணிமுதல் மதியம் 1 மணிவரையில் மூடப்படும்.(வடக்குப் பகுதியில் இருந்து வரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதியானது வழங்கப்படும்)

தெற்கு அல் பர்ஷா நுழைவிலிருந்து உம் சகேம் சாலை காலை 7 மணிமுதல் மதியம் 1 மணிவரையில் மூடப்படும். (அல் காலித் மற்றும் ஹிஸ்ஸா சாலையில் திரும்பிச் செல்லலாம்)

அரேபியன் ராஞ்செஸ் -லிருந்து உம் சகேம் சாலை காலை 7 மணிமுதல் மதியம் 1 மணிவரையில் மூடப்படும். (வலப்பக்க திருப்பத்தில் மட்டுமே செல்லலாம்)

மோட்டார் சிட்டி எக்ஸிட்டிலிருந்து உம் சகேம் சாலை காலை 7 மணிமுதல் மதியம் 1 மணிவரையில் மூடப்படும். (வலப்பக்க திருப்பத்தில் மட்டுமே செல்லலாம்)

ஸ்டுடியோ சிட்டி எக்ஸிட்டிலிருந்து உம் சகேம் சாலை காலை 7 மணிமுதல் மதியம் 1 மணிவரையில் மூடப்படும். (வலப்பக்க திருப்பத்தில் மட்டுமே செல்லலாம்)

பார்கிங் சைக்கிள் கோர்ஸ் (சைக்கிளிங் கேட்) காலை 7 மணிமுதல் மதியம் 1 மணிவரையில் மூடப்படும். (தெற்குப் பகுதியில் இருந்து வருபவர்கள் மட்டும் செல்லலாம்)

DUBAI
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap