UAE Tamil Web

துபாய் போலீஸ் அறிவிப்பு: 9 மாதங்களில் 46% குறைந்த சாலை விபத்துகள்.!

dubai

நடப்பாண்டு ஜனவரி முதல் சாலை விபத்துகள் மற்றும் விபத்துக்களில் இறப்பவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாக துபாய் காவல்துறை அறிவித்துள்ளது.

- Advertisment -

துபாய் காவல்துறை பொது போக்குவரத்து இயக்குநரகம் சமீபத்தில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில், கடந்த ஜனவரி முதல் துபாயில் சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்புகள் 42% குறைந்துள்ளன. இதே காலகட்டத்தில் பதிவான போக்குவரத்து விபத்துக்களின் எண்ணிக்கை 46% குறைந்துள்ளது.

சிறிய போக்குவரத்து விபத்து காயங்களின் எண்ணிக்கை 47.4 சதவீதமும், லேசான போக்குவரத்து விபத்து காயங்களின் எண்ணிக்கை 43.1 சதவீதமும் குறைந்துள்ளது. அதே போல கடுமையான போக்குவரத்து காயங்களின் எண்ணிக்கையிலும் 10.2 சதவீதம் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

துபாய் சாலைகளை பயன்படுத்துவோரின் பாதுகாப்பை உறுதி செய்வதில் போக்குவரத்து இயக்குநரகத்தின் தொடர் முயற்சிகளுக்கு, துபாய் காவல்துறை தலைமை கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் அப்துல்லா கலீஃபா அல் மர்ரி பாராட்டு தெரிவித்தார். 2018-ம் ஆண்டு முதல் 2,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்களுக்கு(security personnel) பயிற்சியளிப்பதில் துபாய் போலீஸ் போக்குவரத்து பயிற்சி நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகளுக்கும் பாராட்டு தெரிவித்தார்.

கடந்த 9 மாதங்களில் 262,940 தீவிர போக்குவரத்து டிக்கெட்டுகள்(போக்குவரத்து சட்டங்களை மீறியுள்ளதைக் குறிக்கும்) போக்குவரத்து இயக்குநரகத்தால் வழங்கப்பட்டுள்ளது. இது போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது அதிகாரிகள் எடுத்துள்ள சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையை காட்டுகிறது.