UAE Tamil Web

துபாய் – ஷார்ஜா இடையேயான போக்குவரத்து இனி மேலும் எளிதாகும்.! RTA வெளியிட்ட புதிய அறிவிப்பு..

RTA

துபாயில் மிர்டிஃப் சிட்டி சென்டருக்கு அருகிலுள்ள அல் ரெபாட் மற்றும் ஷேக் முகமது பின் சயீத் சாலைகள் சந்திக்கும் இடத்தில் விரிவுபடுத்தப்பட்ட சாலைகள் மற்றும் பாலங்கள், நவம்பர் 20-ஆம் தேதியான நாளை திறக்கப்படும் என்று RTA அறிவித்துள்ளது.

- Advertisment -

அல் ரெபாட் மற்றும் திரிபோலி வீதிகளில் ஒரு லேன் சேர்க்கப்பட்டு இப்பகுதியில் தற்போதுள்ள பாலங்கள் அகலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மேம்பாடுகள் துபாய் மற்றும் ஷார்ஜா இடையேயான போக்குவரத்து ஓட்டத்தை மேலும் எளிதாக்கும் என்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் என்றும் RTA தெரிவித்துள்ளது.

ஷேக் சயீத் பின் ஹம்தான் அல் நஹ்யான் சாலையுடன் இணைக்கும் ஃப்ளைஓவர், எமிரேட்ஸ் சாலை மற்றும் நவுக்சோட் தெருதெருவுக்கான பாலங்கள், மற்றும் அல்ஜீரியா செயின்ட் சந்திப்பில் ஒரு சுரங்கப்பாதை உட்பட திரிபோலி தெருவில் உள்ள அனைத்து சந்திப்புகளையும் RTA ஏற்கனவே மேம்படுத்தியுள்ளது.

திரிப்போலி தெரு மற்றும் ஷேக் சயீத் பின் ஹம்தான் அல் நஹ்யான் சாலை சந்திப்பு முதல் எமிரேட்ஸ் சாலை வரை ஒரு புதிய சாலையின் கட்டுமானமும் நிறைவு செய்யப்பட்டுள்ளது. 5.3 கி.மீ நீளமுள்ள இந்த சாலை, ஒவ்வொரு திசையிலும் மூன்று பாதைகளைக் கொண்டுள்ளது. இது வாதி அல் ஷபக் பகுதியின் நகரமயமாக்கலுக்கு உதவும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.