UAE Tamil Web

துபாயின் துணை ஆட்சியாளர் ஷேக் ஹம்தான் காலமானார் : துபாய் ஆட்சியாளர் அறிவிப்பு..!

sheikh Hamdan

துபாயின் துணை ஆட்சியாளரும் நிதி அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் ரஷீத் இன்று காலமானதாக அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அறிவித்திருக்கிறார்.

ஷேக் ஹம்தானுக்கு சமீப காலமாகவே உடல் நிலை மோசமாக இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு அறுவை சிகிச்சைகாக ஷேக் ஹம்தான் வெளிநாடு சென்று திரும்பினார். ஆனால், என்ன சிகிச்சை? எங்கு நடைபெற்றது போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.

தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமாக இருக்கவே, துபாயின் ஆட்சியாளர் ட்விட்டர் வாயிலாக அவர் உடல்நலம் தேற பிரார்த்திப்பதாக தெரிவித்துவந்தார். இந்நிலையில் தனது 75 வது வயதில் ஷேக் ஹம்தான் காலமானதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து துபாய் ஆட்சியாளர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில்,” நாம் கடவுளுக்கு சொந்தமானவர்கள். அவரிடமே நாம் திரும்புவோம். என்னுடைய சகோதரனும் உற்ற தோழனுமான உங்களின் மீது கடவுள் இரக்கம் காட்டட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

துபாயின் துணை ஆட்சியாளரின் மறைவிற்கு UAE Tamil Web ஆசிரியர் குழு அஞ்சலி செலுத்துகிறது. துபாய் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை எங்களது குழு தெரிவித்துக்கொள்கிறது.

sheikh Hamdan
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap