UAE Tamil Web

போக்குவரத்து பாதுகாப்புத் துறையின் முயற்சிகளை மேம்படுத்த அதிநவீன பயிற்சி நிலையம் திறப்பு..

dubai

துபாய் போலீஸ் போக்குவரத்து பாதுகாப்பு துறையின் ஒரு பகுதியாக புதிய “ஹம்தான் ஸ்மார்ட் சிமுலேஷன் மற்றும் பயிற்சி நிலையத்தை”(Hamdan Smart Simulation and Training Station), துபாயின் பட்டத்து இளவரசரும், நிர்வாக சபையின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இன்று திறந்து வைத்துள்ளார்.

- Advertisment -

இந்நிலையம் துபாயில் போக்குவரத்து பாதுகாப்புத் துறையின் அதிநவீன பயிற்சி வசதி பாதுகாப்பு முயற்சிகளை மேம்படுத்துவதோடு, பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கப் பணியாளர்களின் தயார்நிலையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.லேட்டஸ்ட் கருவிகளை கொண்டுள்ள இந்த நிலையம், மெய்நிகர் ரியாலிட்டி மற்றும் சிமுலேஷன்(உருவகப்படுத்தல்) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விரிவான சூழ்நிலை அடிப்படையிலான அவசரகால பயிற்சியை வழங்குகிறது.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஷேக் ஹம்தான், ” அமீரகத்தின் துணை தலைவரும், பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் ஆதரவோடும், மற்றும் நாட்டை உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக மாற்ற உழைக்கும் விசுவாசமான மக்களின் முயற்சிகள் காரணமாக புதிய நிலையம் நிறுவப்பட்டது”என்று கூறியுள்ளார்.

துபாயின் பாதுகாப்பு குழுக்கள் சர்வதேச தரத்திலான பயிற்சி பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல் அனைத்து சூழ்நிலைகளையும் சமாளிக்கும் திறன் பெற்றவை. தொடர்ச்சியான பயிற்சியும், சமீபத்திய தொழில்நுட்ப அறிவை வழங்குவதும் இதன் முக்கிய குறிக்கோள்கள். மிக உயர்ந்த செயல்திறனை தக்கவைக்க இதை வழங்குகிறோம்” என்று ஷேக் ஹம்தான் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.

திறப்பு நிகழ்வின் போது துபாய் மெட்ரோ நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள CCTV அமைப்புகள், எக்ஸ்போ 2020 மெட்ரோ நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஸ்மார்ட் பயோமெட்ரிக் வருகை அமைப்பு உள்ளிட்ட செயல்பாட்டு அறையில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து ஷேக் ஹம்தான் பின் முகமதுவுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

dubai1

மேலும் அவர் ஒரு மெட்ரோ கேபினுக்குள் நடைபெற்ற பணயக்கைதிகள் நெருக்கடி உருவகப்படுத்துதல் பயிற்சியில் பங்கேற்றார். செயல்பாட்டு அறை உருவகப்படுத்துதல் மற்றும் பயிற்சிக்கான ஹம்தான் ஸ்மார்ட் நிலையத்தின் எதிர்கால லாபி ஆகியவற்றை பார்வையிட்டார்.

மேலும் போக்குவரத்து பாதுகாப்பு நிபுணர்களுக்காக நடத்தப்பட்ட மிகப்பெரிய பட்டறைக்கு கின்னஸ் உலக சாதனை படைத்ததற்காக, சிமுலேஷன் மற்றும் பயிற்சி ஹம்தான் ஸ்மார்ட் நிலையத்திற்கு ஷேக் ஹம்தான் வாழ்த்து தெரிவித்தார். இந்த பயிலரங்கில் 321 நிபுணர்கள் கலந்து கொண்டு பாதுகாப்புத் துறை எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் குறித்து விவாதித்தது குறிப்பிடத்தக்கது.