UAE Tamil Web

துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச்: சவால் நிகழ்வின் ஸ்டார்கள் இவர்கள் தான்.! 2 பேரை பாராட்டியுள்ள துபாய் இளவரசர்..

shek hamdan

துபாயின் பட்டத்து இளவரசரும், நிர்வாக சபையின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், கடந்த நவம்பர் 28-ஆம் தேதியுடன் முடிவடைந்த துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டுள்ளார்.

- Advertisment -

இளவரசர் ஷேக் ஹம்தான் தனது ட்விட்டர் பதிவில் ஃபிட்னஸ் சேலஞ்சில் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்டுள்ளதோடு, நடந்து முடிந்த 30 நாள் ஃபிட்னஸ் சவாலானது துபாயை உலகின் மிகச் சுறுசுறுப்பான மற்றும் ஆற்றல்மிக்க நகரங்களில் ஒன்றாக மாற்றுவதற்கான ஒரு முயற்சி. இது கடுமையான தனிப்பட்ட இலக்குகளை நிர்ணயிக்கவும், உண்மையில் அவற்றை அடையவும் நம் அனைவரையும் தூண்டியது என கூறியுள்ளார்.

குறிப்பாக 2020 துபாய் ஃபிட்னஸ் சேலஞ்சில் கலந்து கொண்ட 2 பங்கேற்பாளர்களின் முயற்சிகளை ஷேக் ஹம்தான் பாராட்டியுள்ளார். முதலாவது நபர்: மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள டோகோ நாட்டை சேர்ந்த காஃ னி சோலிமேன், சவாலில் 30 நாட்களும் அல்ட்ராமாரத்தான் (45 கி.மீ) ஓடினார்.

இரண்டாவது நபர்: பிலிப்பைன்ஸ் நாட்டவரான பாவ்லோ மங்கோலினன், 30 நாட்களும் ஒரு மராத்தான் தூரத்தை (10 கி.மீ) நீந்தி கடந்தார் என்று ஷேக் முகமது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆண்டு சமூக இடைவெளியுடனான ஃபிட்னஸ் சேலஞ்ச் நிகழ்வு 150 இடங்களில் 200-க்கும் மேற்பட்ட மெய்நிகர் அமர்வுகள் மற்றும் 2,000 வகுப்புகளுடன் நடத்தப்பட்டது. ஃபிட்னஸ் சேலஞ்சில் 1.5 மில்லியன் பங்கேற்பாளர்கள் மற்றும் 100 சதவீத பள்ளிகள் பங்கேற்றதாக நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.