UAE Tamil Web

“உங்களுடைய பணியை நீங்கள் பூர்த்தி செய்துவிட்டீர்; இதற்கு இந்த தேசமே சாட்சி சொல்லும்” : ஷேக் ஹம்தானுக்காக துபாய் ஆட்சியாளர் எழுதிய கண்ணீர் கவிதை..!

shekh mohammed shekih hamdan

துபாயின் துணை ஆட்சியாளரும் அமீரக நிதியமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் நேற்று காலமானார். இதனையடுத்து அமீரக தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.

இதன் நீட்சியாக அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேக் ஹம்தானுடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதனுடன் கவிதை ஒன்றினையும் இணைத்துள்ளார்.

இத்தனை ஆண்டுகாலமாக ஷேக் ஹம்தானுடன் பழக முடிந்தது தன்னுடைய அதிர்ஷ்டம் என துபாய் ஆட்சியாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அக்கவிதையில் தனது குடும்பத்திற்கும் நாட்டிற்கும் ஷேக் ஹம்தான் எவ்வாறு துணை நின்றார் என்பதை துபாய் ஆட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.

“எனக்கு எல்லையில்லா ஒத்துழைப்பை வழங்கிய எனது சகோதரர்” என ஷேக் ஹம்தானைக் குறிப்பிட்ட ஆட்சியாளர், அவரது தொலைநோக்குப் பார்வை, ஞானம், முடிவெடுப்பதில் உள்ள திறமை, சிக்கல்களை கையாளும் தனித்தன்மை குறித்து வியந்து பாராட்டியுள்ளார்.

துபாய் ஆட்சியாளர் தனது கவிதையில்,” உங்களது பணியை நீங்கள் சிறப்பாக பூர்த்தி செய்துவிட்டீர் என்பதற்கு இந்த தேசமே சாட்சியாக நிற்கிறது. உங்களைப்போல உயர்ந்த நோக்கமும் தீர்மானமும் கொண்டவர்களால் இந்த தேசம் எழுச்சி பெறும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

shekh mohammed shekih hamdan
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap