UAE Tamil Web

துபாய் ஆட்சியாளர் குடும்பத்தில் பிறந்த குழந்தை – குவியும் வாழ்த்துக்கள்..!

bigstock-family-motherhood-parenting-

அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களுடைய இரண்டாவது மகனும் துபாயின் துணை ஆட்சியாளருமான ஷேக் மக்தூம் பின் முகமது (Sheikh Maktoum bin Mohammed) அவர்களுக்கு மகள் பிறந்திருக்கிறார்.

- Advertisment -

இதனையடுத்து துபாய் ஆட்சியாளரின் மகளும் ஷேக் மக்தூமின் சகோதரியுமான ஷேக்கா லத்தீஃபா பின்ட் முகமது பின்  ரஷீத் அல் மக்தூம் (Sheikha Latifa bint Mohammed bin Rashid Al Maktoum) தனது சகோதரருக்கு தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Latifa M R Al Maktoum (@latifamrm1)

இது ஒருபுறமிருக்க துபாய் துணை ஆட்சியாளரின் மனைவியான ஷேக்கா மரியம் பின்ட் புட்டி அல் மக்தூம் (Sheikha Maryam bint Butti Al Maktoum) தனது கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும், தங்களது குழந்தை “ஹிந்த்” ன் வரவிற்காகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

dubai deputy ruler
Image Credit: latifamrm1/Instagram

நவம்பர் 24 ஆம் தேதியன்று பிறந்தநாள் கொண்டாடும் துணை ஆட்சியாளருக்கு இந்த வருட பிறந்தநாளின் போது மகள் பிறந்திருப்பதால் அவருக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துவருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by @el3asjadiyah