UAE Tamil Web

“அமீரகம் உண்மையான விசுவாசியை இழந்து நிற்கிறது” – ஷேக் ஹம்தான் மறைவையொட்டி அபுதாபி இளவரசர் வெளியிட்ட ட்வீட்..!

shekh familiy

துபாயின் துணை ஆட்சியாளரும் அமீரகத்தின் நிதியமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் இன்று காலமானார். இதனைத் தொடர்ந்து அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

- Advertisment -

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அல் நஹ்யான்,” தனது வாழ்நாள் முழுவதும் தேசப்பற்றுடன் இருந்த உண்மையான விசுவாசியை அமீரகம் இழந்துவிட்டது. அவர் இந்நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் கொடுத்ததற்கு நிகராக கடவுள் அவருக்குக் கருணையை வழங்கட்டும். இந்த மோசமான தினத்தில் எனது சகோதரர் ஷேக் முகமது பின் ரஷீத் அவர்களுக்கும் மாண்புமிகு மக்தூம் குடும்பத்திற்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.