UAE Tamil Web

“என்னுடைய அழகான நாடு” – ஷேக் முகமது வெளியிட்ட சூப்பர் வீடியோ..!

world coolest winter

அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் “என்னுடைய அழகான நாடு” எனத் தலைப்பிட்டு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

- Advertisment -

0.55 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில் அமீரகத்தில் உள்ள பல்வேறு பள்ளத்தாக்குகள், பாலைவனம், கடற்கரைகள், அற்புதமான கோட்டைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

அமீரகத்தின் பெருமைவாய்ந்த அழகிய இடங்களை பொதுமக்கள் சென்று காண உத்வேகம் அளிக்கும் வகையில் வேல்ர்ட் கூலஸ்ட் விண்டர் (World’s Coolest Winter) என்னும் திட்டத்தை ஷேக் முகமது சமீபத்தில் துவங்கிவைத்தார். அதன் ஒருபகுதியாகவே இந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.