UAE Tamil Web

வாழ்க்கையின் மிகப்பெரிய ரிஸ்க் எது தெரியுமா? – தனது அனுபவத்தை வீடியோவாக வெளியிட்ட துபாய் ஆட்சியாளர்..!

Sheikh-Mohammed-Bin-Rashid-Al-Maktoum

அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிகுரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்கள் வாயிலாக அவ்வப்போது பொதுமக்களுக்கு தனது வாழ்க்கை அனுபவத்தின் மூலமாக அறிவுரைகள் கூறுவது துபாய் ஆட்சியாளரின் வழக்கம். அதன் அடிப்படையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “அறிவுக்கான தேடலில் முடிவு என்ற ஒன்று இருப்பதில்லை என எனது குழுவிடம் எப்போதும் கூறுவேன். அது உண்மை என்பது தினந்தோறும் நிரூபணமாகிக்கொண்டே இருக்கிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நம் அனைவருக்குள்ளும் கனவுகள் இருக்கின்றன. ஆனால் ஒரு தலைவனால் மட்டுமே கனவுகளை நிஜமாக்க முடியும். அதேபோல, நாம் அனைவரும் வாழ்க்கையில் ரிஸ்க்குகளை எடுக்கிறோம். ஆனால் வாழ்வின் மிகப்பெரிய ரிஸ்க் எது தெரியுமா? ரிஸ்க் எடுக்காமல் இருப்பதுதான்” என ஷேக் முகமது குறிப்பிட்டுளார்.

Sheikh-Mohammed-Bin-Rashid-Al-Maktoum
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap