UAE Tamil Web

துபாய்: போக்குவரத்து கண்காணிப்புக்கான மிகப்பெரிய மற்றும் அதிநவீன ஸ்மார்ட் சென்டரை(Intelligent Traffic Systems Centre) துவக்கி வைத்தார் ஷேக் முகமது

dubai

துபாயில் போக்குவரத்து கண்காணிப்புக்கான ஸ்மார்ட் மையத்தை அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தொடங்கி வைத்துள்ளார்.

- Advertisment -

அல் பார்ஷாவில் தற்போது திறக்கப்பட்டுள்ள நுண்ணறிவு போக்குவரத்து அமைப்புகள் மையமானது(Intelligent Traffic Systems Centre), செயற்கை நுண்ணறிவு, பெரிய தரவு(big data) மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்ஆகியவற்றால் இயக்கப்படும். துபாயில் திறக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் மையம் 590 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலைக் கணிக்கக்கூடிய இந்த ஸ்மார்ட் மையம் உலகின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களில் ஒன்றாகும். இந்த மையம் துபாய் முழுவதும் போக்குவரத்து இயக்கங்களை எளிதாக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதனுடன் இணைக்கப்பட்டுள்ள நுண்ணறிவு போக்குவரத்து அமைப்புகள்(intelligent traffic systems) இப்போது துபாயில் 60% சாலை நெட்வொர்க்கை உள்ளடக்கியது.


இந்த மையம் தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள துபாய் ஊடக அலுவலகம், இந்த ஸ்மார்ட் மையம் சாலை சம்பவங்களைக் கண்டறிவதற்கும் நெரிசல்களைக் கணிப்பதற்குமான நேரத்தை மேம்படுத்தும். போக்குவரத்தை கண்காணிக்கவும், தரவை கைப்பற்றவும் மற்றும் பிற ஸ்மார்ட் சேவைகளை இயக்கவும் இந்த மையம் ஏராளமான சாதனங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. நுண்ணறிவு போக்குவரத்து அமைப்புகள் மூலம், இந்த மையம் தற்போதைய மற்றும் எதிர்கால சாலைகள் வலையமைப்பை(roads network) கண்காணித்து நிர்வகிக்க முடியும் என்று கூறியுள்ளது. செயற்கை நுண்ணறிவு, பெரிய தரவு பகுப்பாய்வு மற்றும் முடிவெடுக்கும் ஆதரவு கருவிகளுடன் மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் இந்த மையம் இணைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மேலாண்மை(Traffic management): இது போக்குவரத்து இயக்கத்தை நிர்வகிக்க உதவுகிறது. மேலும் போக்குவரத்துக்கு இயக்கத்தை கட்டுப்பாட்டு மையத்துடன் ஒருங்கிணைக்கிறது.

சிறப்பு பயிற்சி: நிபுணத்துவ பயிற்சி வகுப்புகளை முடித்து தகுதி பெற்றுள்ள 60 எமிராட்டிகள் கணினியை நிர்வகிக்கவும்,இயக்கவும் பயன்படுத்தப்படுகின்றனர்.

கூடுதல் தகவல் தெரிவித்துள்ள RTA, நிறுவப்பட்ட அமைப்புகளில் 116 போக்குவரத்து கண்காணிப்பு கேமராக்கள் அடங்கும். கூடுதலாக, 100 வாகன கண்காணிப்பு சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளது. பயண நேரம் மற்றும் சராசரி வேகத்தை கணக்கிடுவதற்கு 115 சாதனங்களை நிறுவுதல் மற்றும் 17 சாலை வானிலை(road weather )தகவல் அமைப்புகள் ஆகியவையும் திட்டப்பணிகளில் அடங்கும்.

மேலும் RTA-வின் போக்குவரத்து கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் துபாய் போலீஸ் போக்குவரத்து கேமராக்களின் ஒருங்கிணைப்பு, குறிப்பாக பெரிய நிகழ்வுகள் அல்லது அவசர காலங்களில் துபாயில் போக்குவரத்து நிர்வாகத்தின் செயல்திறனை மேம்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.