அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் துபாய் பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கும், துபாய் நகராட்சிக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
காயமடைந்து மணலில் சிக்கியிருந்த ஒரு பறவை பற்றி சரியான நேரத்தில் தகவல் அளித்ததற்காக ரோலா அல்காதிப் என்ற பெண் பத்திரிகையாளருக்கும், பறவையை மீட்க விரைந்து நடவடிக்கை எடுத்ததற்காக துபாய் நகராட்சிக்கும் ஷேக் முகமது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து கொண்டுள்ளார்.
رولا .. الراحمون يرحمهم الرحمن .. شكراً لقصتك الجميلة.. شكراً لبلدية دبي .. ونسأل الله أن يديم رحمته على هذا البلد الطيب ..لا قيمة لأية حضارة بدون قيَم .. قيَم تعطينا معنى لإنسانيتنا .. https://t.co/TVRRph751g
— HH Sheikh Mohammed (@HHShkMohd) November 20, 2020
இது தொடர்பாக ஷேக் முகமது ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் காயமடைந்த பறவை குறித்து நீங்கள் வெளிப்படுத்திய உங்கள் அழகான கருத்துக்களுக்கு நன்றி, . துபாய் நகராட்சிக்கு நன்றி .. இந்த நல்ல நாடு மீது கருணை காட்டும்படி கடவுளிடம் கேட்டுக்கொள்கிறோம் .. மதிப்புகள் இல்லாத எந்த நாகரிகத்திற்கும் எந்த அர்த்தமும் இல்லை .. மதிப்புகள் மனிதகுலத்திற்கு அர்த்தம் தரும்’என்று பதிவிட்டுள்ளார்.
அரபு ஊடக பத்திரிகையாளரான ரோலா காயமடைந்த பறவை பற்றி சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவுகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஷேக் முகமது இந்த ட்வீடை பதிவு செய்துள்ளார். முன்னதாக எழுத்தாளரும், நிருபருமான ரோலா நேற்று வெளியிட்டிருந்த ட்வீட்டில், “நான் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தேன், அங்கு காயமடைந்து கிடந்த பறவை ஒன்றை பார்த்தேன் … உடனே நான் துபாய் நகராட்சியை அழைத்து காயமடைந்திருந்த பறவை பற்றி தகவல் சொன்னேன்.
காயமடைந்த பறவையின் படத்தை இருப்பிடத்துடன் வாட்ஸ்அப் செய்ய கூறினார்கள். அடுத்த அரை மணி நேரத்தில், அவர்கள் பறவையை மீட்டு எனக்கு அதன் படத்தை அனுப்பினர். பறவை நிலையாக இருப்பதாகவும், அதற்கு சிறிது சிகிச்சை மட்டுமே தேவைப்படுவதாகவும் அதை தர உள்ளதாகவும் தகவல் தெரிவித்தனர் … கடவுள் அமீரகத்தையும் அதன் குடியிருப்பாளர்களையும் பாதுகாக்கிறார்”என்று பதிவிட்டிருந்தார்.
மேலும் அந்த பதிவில், ‘ஒரு விலங்குக்கு இத்தகைய கண்ணியம், அக்கறை மற்றும் மரியாதை கிடைத்தால், நீங்கள் ஒரு மனிதனுக்கு இங்கு கிடைக்கும் மதிப்பு மற்றும் முக்கியத்துவத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள். ஊழல் மற்றும் மோதல்கள் உள்ள நாடுகள் இந்த சம்பவத்திலிருந்து நாடுகளை எவ்வாறு கட்டமைக்க வேண்டும் என்பதை கற்று கொள்ளுங்கள்’என்றும் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
#دبي_الخير #mydubai pic.twitter.com/PLFjE82kpb
— ROLA ALKHATIB رولا الخطيب (@RALOUL82) November 17, 2020