அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இன்று துபாய் லீடர்ஸ் (Dubai Leaders) என்னும் திட்டத்தைத் துவங்கி வைத்தார்.
“ஒரே மனப்பான்மையுடனும் தலைமைத்துவம் நிறைந்த கலாச்சாரத்துடனும் இதே செயல்முறையைத் தொடரக்கூடிய தகுதி வாய்ந்த தலைவர்கள் இருப்பதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் நோக்கம்” என ஆட்சியாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
وأطلقت اليوم برنامج “قيادات دبي” لاعداد ٥٠ من الكفاءات الحكومية ممن رشحها مدراء العموم في دوائر دبي ليكونوا مساعدين ونواباً لهم .. الهدف ضمان وجود قيادات مؤهلة قادرة على مواصلة مسيرة البناء بنفس الروح وبنفس الثقافة القيادية .. pic.twitter.com/FDDAg8ijaw
— HH Sheikh Mohammed (@HHShkMohd) November 28, 2020
தலைமைக்கான முகமது பின் ரஷீத் திட்டத்தின் மூலம் சர்வதேச ஆணை மற்றும் செல்வாக்குமிக்க தலைமைத்துவ திட்டங்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆட்சியாளர் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். அதேபோல, பாரிஸ் பல்கலைக்கழகத்தில் நிர்வாக தலைமைத்துவத்தில் முதுகலை படித்தவர்களுக்கு ஆட்சியாளர் பட்டங்களை வழங்கினார்.
شهدت تخريج دفعتين من برنامج محمد بن راشد للقادة ضمن برنامجي الانتداب الدولي والقيادات المؤثرة .. بالاضافة لمجموعة من خريجي الماجستير في القيادة التنفيذية بجامعة باريس .. إعداد أجيال جديدة من القيادات هو ضمان استدامة واستمرارية لمسيرتنا pic.twitter.com/eGB7b9IF8o
— HH Sheikh Mohammed (@HHShkMohd) November 28, 2020
“எங்களுடைய பாதையின் தொடர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் புதிய தலைமுறைகளுக்கான தலைவர்களை உருவாக்கும் பணி நடைபெறும்” என ஆட்சியாளர் தெரிவித்தார்.