UAE Tamil Web

டிக்கெட் எடுக்க பணமில்லாமல் தவித்த பெண்ணிற்கு உதவிய மெட்ரோ ஊழியர் – பாராட்டிய துபாய் ஆட்சியாளர்..!

Kindness-journ

துபாயைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் அஷ்லேக் ஸ்டீவர்ட் (Ashleigh Stewart). இவர் எமிரேட்ஸ் டவர்ஸ் மெட்ரோ நிலையத்தில் பயணத்திற்காக காத்திருந்திருக்கிறார். அப்போது டிக்கெட் எடுக்க முயற்சிக்கும்போதுதான் அவருடைய மெட்ரோ அட்டையில் பணமில்லை எனத் தெரியவந்திருக்கிறது.

- Advertisment -

ஸ்டீவர்ட் தனது பணப் பையையும் வீட்டிலேயே மறந்துவிட்டு வந்திருக்கிறார். என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தவரைக் கவனித்த மெட்ரோ ஊழியர், அவரிடம் நடந்ததை விசாரித்திருக்கிறார்.

பெண் பத்திரிக்கையாளரின் பிரச்சினையை உணர்ந்த அந்த ஊழியர், தானே டிக்கெட் எடுத்து பயணத்தைத் தொடரும்படி அவரை அறிவுறுத்தியிருக்கிறார்.

இதுகுறித்து ஸ்டீவர்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்,” நான் டிக்கெட்டிற்கான பணத்தை திருப்பித் தருகிறேன் எனச் சொன்னபோது அவர் அதை மறுத்துவிட்டார். இது சக மனிதர் மீதான கருணை அன்றி வேறில்லை. சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) இந்த தொழிலாளருக்கு விருது அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்டீவர்டின் கோரிக்கை தங்களது கவனத்திற்கு வந்ததாக RTA வும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

தனக்கு உதவி செய்த ஊழியரின் புகைப்படத்தையும் ஸ்டீவர்ட் தனது ட்விட்டர் பதிவுடன் இணைத்துள்ளார்.

துபாய் ஆட்சியாளரின் பாராட்டு

அமீரகத்தின் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் பெண் பத்திரிக்கையாளரின் ட்விட்டர் பதிவை “உண்மையான அரசு ஊழியருக்கான எடுத்துக்காட்டு” எனத் தலைப்பிட்டு ரீ-ட்வீட் செய்துள்ளார்.