UAE Tamil Web

“விரைவில் குணமடைந்து வாருங்கள் சகோதரரே”- துபாய் ஆட்சியாளர் வெளியிட்ட உருக்கமான ட்வீட்.!

sheikh Hamdan

அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது சகோதரரும் துபாயின் துணை ஆட்சியாளரும் நிதி அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ளார்.

துபாய் ஆட்சியாளர் தனது ட்விட்டர் பக்கத்தில்,” எனது சகோதரரும் நண்பருமான உங்களை அல்லா குணப்படுத்தட்டும், அல்லா உங்களை பாதுகாக்கட்டும், அல்லா உங்களை ஆசிர்வதிக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஷேக் ஹம்தானின் உடல்நிலை சீராக அமீரக தலைவர்கள், மக்கள் ஆகியோர் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

ஹம்தான் பின் ரஷீத் அறக்கட்டளை மூலமாக பல்வேறு திறமையுள்ள ஏமிராட்டி இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றிய இவருக்காக பலரும் பிரார்தித்து வருகின்றனர்.

துபாய் துணை ஆட்சியாளர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிநாட்டிலிருந்து அறுவை சிகிச்சை முடிந்து திரும்பியது குறிப்பிடத்தக்கது.

sheikh Hamdan
0 Shares
Share via
Copy link