UAE Tamil Web

துபாய்: ஆபத்தில் முடிந்த அதிவேகம் : 4 பேர் பலி, 10 பேர் படுகாயம்..!

speed kills

துபாய்: இந்தாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் துபாயில் மட்டும் அதிவேகமாக வாகனங்களை இயக்கிய காரணத்தினால் 20 விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. இதில் 4 பேர் உயிரிழந்ததாகவும் 10 பேர் படுகாயமடைந்ததாகவும் துபாய் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

- Advertisment -

ஸ்பீட் கில்ஸ் என்னும் வருடாந்திர திட்டத்தைத் துவங்கி வைத்தபோது துபாய் காவல்துறை இந்த புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய துபாய் காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு இயக்குனர் பிரிகேடியர் சைஃப் முஹைர் அல் மஸ்ரோயி (Saif Muhair Al Mazroui),” 30 நாட்களுக்கு நீடிக்கும் இந்தத் திட்டத்திற்கான இந்த வருட ஸ்லோகமாக Don’t let speeding turn you into a killer (அதிவேகத்தால் கொலையாளிகளாக மாறாதீர்கள்) என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

சமூக வலைத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல் வழியாக மக்களிடையே விழிப்புணர்வை துபாய் காவல்துறை ஏற்படுத்திவருகிறது. கியோஸ்க்ஸ் மூலமாக போக்குவரத்து அபராதங்களை செலுத்த மக்களை அழைப்பதுடன் ரோந்துப்பணிகளை தீவிரப்படுத்தவும் இருப்பதாக துபாய் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

கடந்த ஆண்டு நிகழ்ந்த 26 விபத்துகளில் 7 பேர் உயிரிழந்ததாகவும் 20 பேர் படுகாயமடைந்ததாகவும் மஸ்ரோயி குறிப்பிட்டார். அதேபோல, வாகனவோட்டிகள் வேகக் கட்டுப்பாட்டை மதிக்க வேண்டும் எனவும் சாலை விதிகளை முறையாகப் பின்பற்றவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

2010 ஆம் ஆண்டு முதல் ஸ்பீட் கில்ஸ் திட்டத்தை துபாய் காவல்துறை செயல்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.