துபாயில் கடந்த 23,24,25 மற்றும் 26 ஆம் தேதிகளில் சர்வதேச ஜுனியர் ஃபேஷன் ஷோ நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாட்டின் கோவையைச் சேர்ந்த ராணா சிவகுமார் முதலிடம் பிடித்து அசத்தியிருக்கிறார்.
ஆறு வயது சிறுவனான ராணா தனது மூன்றாம் வயதிலிருந்தே பேஷன் ஷோவில் கலந்துகொண்டு வருகிறான். இதுவரையில் 15 க்கும் மேற்பட்ட விருதுகளையும் இந்தச் சிறுவன் பெற்றிருக்கிறான்.
இந்நிலையில் தமிழகத்தின் முதல்வர் திரு.முக.ஸ்டாலின் ராணாவை நேரில் வரவழைத்து பாராட்டுத் தெரிவித்திருக்கிறார். இது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக ராணாவின் பெற்றோர் ஆனந்தத்துடன் தெரிவித்தனர்.