உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலீஃபா அதன் உயரத்திற்கு மட்டும் புகழ்பெற்றதல்ல. உலக நாடுகளின் முக்கிய நிகழ்வுகள், தலைவர்களின் பிறந்தநாட்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உலக நடப்புகள் என அனைத்திற்கு ஏற்றாற்போல் இந்த உயர கட்டிடம் அதற்கேற்ற முறையில் கம்பீரமாக ஒளியூட்டப்படும்.
LED விளக்குகளினால் வடிவமைக்கப்பட்ட புற சுவர்களில் பிரம்மாண்ட காட்சிகள் திரையிடப்படுவதைப் பார்ப்பது நிச்சயம் அலாதியான அனுபவம் தான். சரி, இதற்கு எவ்வளவு செலவாகும்? அதற்கான பட்டியலைத்தான் ஸ்மார்ட் லைட் இணையதளம் வெளியிட்டுள்ளது.
அதாவது உலகமெங்கிலும் உள்ள முக்கிய இடங்களில் மிகக்குறைந்த செலவில் வண்ண விளக்குகளால் ஒளியூட்டப்படும் இடங்களின் பட்டியலை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, எம்பயர் ஸ்டேட் கட்டிடம், லாஸ் வேகாஸ் ஸ்ட்ரிப், டைம்ஸ் ஸ்கொயர், புர்ஜ் கலீஃபா ஆகிய இடங்களில் ஒளியூட்ட ஆண்டுக்கு ஆகும் செலவு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
View this post on Instagram
சரி.. செலவு என்ன? புர்ஜ் கலீஃபாவை ஒளிரவைக்க வருடத்திற்கு 15 லட்சம் திர்ஹம்ஸ் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறைந்தவிலையா? நிச்சயமாக.. ஏனெனில் இங்கு பொருத்தப்பட்டுள்ள சோலார் தகடுகளே இதற்குக் காரணம். 1,200,000 விளக்குகளினால் கலர் கடலாக காட்சியளிக்கும் புர்ஜ் கலீஃபாவில் சோலார் தகடுகளின் அருளால் ஒரு நாளைக்கு 3,200 கிலோவாட்ஸ் மின்சாரம் மிச்சப்படுத்தப்படுகிறது. இதெல்லாம் சேர்த்து கணக்குப்போட்டு கால்குலேட்டரைத் தட்டினால் நிச்சயம் செலவு எகிறிவிடும்.
இப்போது உலகளவில் ஒளியூட்ட குறைந்த செலவாகும் டாப் 10 இடங்களின் பட்டியலைக் கீழே காணலாம்.
