துபாயில் உள்ள அல் ஷிண்டாகா சுரங்கப்பாதை நாளை (நவம்பர் 14) காலை 12.30 (AM) முதல் காலை 8 மணி வரையிலும் மூடப்படும் என துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ட்விட்டர் வாயிலாகத் தெரிவித்துள்ளது. தேராவை, புர் துபாயுடன் இணைக்கும் இந்த சுரங்கப்பாதை இன்று காலை 12.30 (AM) முதல் காலை 10.30 மணி வரையிலும் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Closure of Al Shindagha Tunnel from Deira to Bur Dubai on Friday, November 13 from 12:30 AM to 10:30 AM and Saturday, November 14 from 12:30 AM until 8 AM. Please use Al Maktoum Bridge and Al Garhoud Bridge to reach your destinations.
— RTA (@rta_dubai) November 12, 2020
ஆகவே வாகனவோட்டிகள், அல் மக்தூம் மேம்பாலம் (Al Maktoum Bridge) மற்றும் கார்ஹூட் மேம்பாலம் (Garhoud bridge) ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு போக்குவரத்து ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதன் காரணமாக குறிப்பிட்ட சில வழித்தட பேருந்துகளின் இயக்கம் தாமதமாகலாம் என போக்குவரத்து ஆணையம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
X13, X02, 8, 95, C01, C03, C07, C09, C18, E306 மற்றும் X23 ஆகிய வழித்தட பேருந்துகள் இயக்கம் இதனால் தாமதமடையலாம்.
A delay is expected on the trips’ schedule of #DubaiBus routes (X13, X02, 8, 95, C01, C03, C07, C09, C18, E306 and X23) amid the closure of Al Shindagha Tunnel, due to diverting the affected bus routes per the closure hours. Please depart early on your trips.
— RTA (@rta_dubai) November 12, 2020